சுன்னத் செய்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் வருமாம்.. சொல்கிறார் டொனால்ட் டிரம்ப்

Oct 10, 2025,10:17 AM IST

வாஷிங்டன்: சிறு வயதில் சுன்னத் செய்வதால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் வரும் என்ற தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் உள்ள ராபர்ட் எப் கென்னடி ஜூனியரும் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


இது ஒரு தவறான வாதம் என்று உடனடியாக இதை மருத்துவ நிபுணர்கள் மறுத்துள்ளனர். இந்தக் கூற்று அபத்தமானது என்றும் அவர்கள் நிராகரித்துள்ளனர்.


அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறுவது அதிபர் டிரம்ப்பின் வழக்கம்தான். இந்த வகையில் ஆட்டிசம் குறித்தும் அவர் தவறாக பேசியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக டிரம்ப் கூறுகையில், 




ஆண் குழந்தைகளுக்குச் செய்யப்படும் சுன்னத் ஆட்டிசத்தை ஏற்படுத்தும். சுன்னத்தின்போது வலியைத் தாங்கக் கொடுக்கப்படும் டைலெனால் என்ற வலி நிவாரணி மாத்திரைதான் இதற்குக் காரணம். அதுமட்டுமல்லாமல், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் டைலெனால் மாத்திரை எடுக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.


ஆனால் இதை மருத்துவ நிபுணர்கள் முற்றிலும் தவறான தகவல் என்று கூறி நிராகரித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு வலி அல்லது காய்ச்சல் இருந்தால் மிதமான அளவில் டைலெனால் (அல்லது அசெட்டமினோஃபென்) எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். அதில் தவறில்லை. மாத்திரையைத் தவிர்ப்பதால் வரும் காய்ச்சல் அல்லது அதிக வலிதான் தாய்க்கும் குழந்தைக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.


டைலெனாலுக்கும் ஆட்டிசத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று மிகச் சமீபத்திய ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.


சுன்னத்துக்கும் ஆட்டிசத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறும் ஆய்வு பல தவறுகளைக் கொண்டுள்ளது என்று மற்ற விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அந்த ஆய்வு சிறிய அளவில், உடல்நலக் குறைபாடுள்ள சிறுவர்களைப் பற்றியது; அதனால் ஆட்டிசம் வந்தது சுன்னத்தால் அல்ல, அவர்களின் மற்ற நோய்களால் இருக்கலாம் என்று நிபுணர்கள் விளக்கினர்.


சுன்னத்தால் எந்தப் பாதகமான உளவியல் விளைவுகளும் இல்லை என்று மற்ற பெரிய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.


கென்னடி வம்சாவளியைச் சேர்ந்த ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் பல வருடங்களாகவே "தடுப்பூசிகளால் ஆட்டிசம் வருகிறது என்ற ஆதாரமற்ற கொள்கையை கூறி வருகிறார். இந்தத் தடுப்பூசி வதந்திக்கு எதிராக, பல அறிவியல் ஆய்வுகள் உள்ளன. ஆனாலும், ஆட்டிசத்தின் காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் அவர், போலி அறிவியல் (Pseudoscience) சார்ந்த கருத்துக்களைப் பேசுவதாகவும், அது மக்கள் மத்தியில் தவறான பயத்தை உருவாக்குவதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கொடிகளுடன் அதிமுக கூட்டங்களில் பங்கேற்போர் யார்.. இப்போதாவது சுதாரிப்பாரா விஜய்?

news

நடிகன் (சிறுகதை)

news

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.. அமைதி நோபல் இவருக்குத்தான்!

news

கை விட்டுப் போகாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது ஏன்.. காங்கிரஸ் ஏதாவது திட்டம் தீட்டுதா?

news

பர்தா அணிந்து வரும் வாக்காளர்களைப் பரிசோதிக்க பெண் அதிகாரிகள்.. பீகார் தேர்தலில் உத்தரவு

news

அதிரடி காட்டி வந்த தங்கம் விலை இன்று சற்று குறைவு... வரலாற்றின் புதிய உச்சத்தில் வெள்ளி விலை...

news

காற்றாய் பறக்கும் கனவுகள்.. (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 3)

news

அண்ணன் விநாயகருக்கான சங்கடஹர சதுர்த்தியும்.. தம்பி முருகனுக்கான கிருத்திகை விரதமும்!

news

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்