ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

Mar 30, 2024,01:38 PM IST

புதுடில்லி:  எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகியோருக்கு இன்று நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.


இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக பாரத ரத்னா விருது கருதப்படுகிறது. மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.  இந்தாண்டிற்கான இந்த விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகிய 5 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒரே ஆண்டில் ஐந்து பேருக்கு இந்த விருது இந்தாண்டு தான் வழங்கப்பட்டுள்ளது.




சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பி.பி பிரபாகர்  ராவ் பெற்றுக் கொண்டார். சரண் சிங் சார்பில்,  அவரது பேரன் ஜெயந்த் செளத்ரி, குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம். எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஆண்டு காலமான நிலையில் அவரது மகள் நித்யா ராவ் விருதினை பெற்றுக்கொண்டார். 


மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச  தலைவருமான  கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த நடைபெற்ற விழாவில் அவரது மகன் ராம்நாத் தாகூர் பெற்றுக் கொண்டார்.வயது மூப்பு காரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானி ஜனாதிபதி மாளிகைக்கு வர முடியாததினால், அவருக்கு இந்த விருது அவரது வீட்டில் சென்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில், குடியரசுத்  துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்