மறைந்தார் எழுத்தாளர் நாறும்பூ நாதன்.. பெரும் சோகத்தில் புத்தகப் பிரியர்கள்!

Mar 16, 2025,11:16 AM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தலைவராக திகழ்ந்து வந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்.


சிறந்த எழுத்தாளரும், நெல்லை மாவட்டத்தில் பல வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக  திகழ்ந்தவருமான நாறும்பூநாதனின் மறைவு வாசிப்புப் பிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் நாறும்பூநாதன். 




தமிழ்நாடு அரசின் உ.வே.சா.விருது உள்ளிட்ட பல விருதுகலளைப் பெற்றவரான நாறும்பூநாதன், நெல்லையில் வருடா வருடம் நடைபெறும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வந்த பெருமைக்குரியவர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பிறந்தவர் நாறும்பூநாதன். நெல்லை மண் சார்ந்த எழுத்துக்களால் மிகப் பிரபலமானார். அவரது படைப்புகள் அனைத்துமே நெல்லை மண்ணின் மாண்பையும், பெருமைகளையும், வாழ்க்கையையும் சித்தரிப்பதாகவே இருக்கும். இவரது தந்தை தமிழாசிரியர். எனவே இயல்பாகவே நாறும்பூநாதனுக்கும் தமிழ் மீதும் இலக்கியம் மீதும் காதல் ஏற்பட்டு விட்டது. பல இலக்கிய சஞ்சிகைகளில் இவரது எழுத்துக்கள் தவறாமல் இடம் பெற்றுள்ளன. 


திருநெல்வேலி: நீர் - நிலம் - மனிதர்கள் என்ற நூல் மிகப் பிரபலமானது. நெல்லை மண்ணின் மைந்தர்கள் குறித்து நிறைய எழுதியுள்ளார். பல கட்டுரைகளை வடித்துள்ளார்.  நிஜ நாடக இயக்கத்திலும் தீவிரமாக செயல்பட்டவர் நாறும்பூநாதன். த்வனி என்ற இதழை நடத்தியுள்ளார். புதுவிசை ஆசிரியர் குழுவிலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல், வாழ்க்கை வரலாற்று நூல், நேர்காணல்கள் உள்ளிட்டவற்றை படைத்துள்ளார் நாறும்பூநாதன். எழுத்துலகிற்கும், வாசிப்பு பிரியர்களுக்கும் நாறும்பூநாதனின் மறைவு பேரிழப்பு.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்