"இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்களா".. ஹரியானா அரசுக்கு ஹைகோர்ட்  கேள்வி

Aug 08, 2023,02:35 PM IST
டெல்லி:  ஹரியானாவில் வன்முறையால் கடும் பாதிப்பை சந்தித்த நூ மற்றும் குருகிராம் பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் வீடுகள், கட்டடங்களை மட்டும் இடிப்பதைப் பார்த்தால் இன அழிப்பு நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது என்று பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தப் பகுதிகளில் தற்போது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்களையும், வீடுகளையும் இடிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து  ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஹரியானாவின் நு பகுதியில் சமீபத்தில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி பின்னர் பெரும் வன்முறையிலும், கலவரத்திலும் முடிந்தது. ஹரியானாவின் பல பகுதிகளில் கலவரம் பரவிய நிலையில் டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் வரை கலவரம் பரவி பதட்டத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நு நகரிலும், குருகிராமிலும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கட்டடங்கள், வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கும் நடவடிக்கையை மாநிலஅரசு திடீரென முடுக்கி விட்டுள்ளது.  கடந்த நான்கு நாட்களில் 350க்கும் மேற்பட்ட தற்காலிக கட்டடங்களையும், 50க்கும் மேற்பட்ட நிரந்தர கட்டடங்களையும் அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர்.

இவை குறிப்பிட்ட சமுதாயத்தினருக்குச் சொந்தமானவை என்பதால் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. ஹரியானா அரசு வேண்டும் என்றே குறிப்பிட்ட சமுதாயத்தினரை பழிவாங்கும் நோக்கில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக் கோரி பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த கோர்ட், உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில்,  இந்த கட்டடங்கள் குறிப்பிட்ட பிரிவினருக்குச் சொந்தமானது என்பதால் இடித்துத் தள்ளப்படுகிறதா அல்லது சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இடிக்கப்படுகிறதா அல்ல��ு இன அழிப்பு நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது.

ஹரியானா அமைச்சர் அனில் விஜ், மாநில அரசு கொடுக்கும் டிரீட்மென்ட்தான் இந்த நடவடிக்கை என்று கூறியிருப்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.  ஆங்கில எழுத்தாளர் லார்ட் ஆக்டன் கூற்றை இங்கு நாம் மேற்கோள்  காட்ட வேண்டியுள்ளது "அதிகாரம் ஊழல் செய்யத் தூண்டும்.. அதீத அதிகாரம் அதீத ஊழலுக்கு வழிவகுக்கும்"

ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்தவிதமான நோட்டீஸும் பிறப்பிக்கப்படவில்லை, உத்தரவும் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதை காரணம் காட்டி இந்தக் கட்டடங்கள் இடிக்கப்படுவது தவறானது. உரிய சட்ட முறைகளையும் அதிகாரிகள் கடைப்பிடிக்கவில்லை.

நூ மற்றும் குருகிராம் நகரங்களில் கடந்த 2 வாரங்களில் எத்தனை கட்டடங்கள் இடிக்கப்பட்டன என்ற விவரத்தை ஹரியானா மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும்.  இடிப்பதற்கு முன்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதா என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்