சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு வருடத்தை முடித்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் வந்துள்ளது ரச்சிதா மகாலட்சுமியிடமிருந்து.
டிவி நட்சத்திரங்களில் சிலர் படுவேகமாக ஜொலிக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி எடுத்த எடுப்பிலேயே டாப்புக்குப் போனவர்தான் ரச்சிதா மகாலட்சுமி. சின்னதாக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தவருக்கு விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி மிகப் பெரிய உயர்வைக் கொடுத்தது. படு வேகமாக மேலே வந்த ரச்சிதா, டிவி ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறிப் போனார்.

அந்த செல்வாக்கு அவரை அடுத்த லெவலுக்கு இட்டுச் சென்றது. இது இன்னும் பெரிய மேடை.. பெரியவீடு.. அதாங்க பிக் பாஸ். இந்தநிகழ்ச்சியில் ரச்சிதாவின் அழகியல் மேலும் பொலிவடைந்தது. குறிப்பாக அவருக்கும், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுக்கும் இடையிலான கியூட்டான தருணங்கள் ரசிகர்கள் மனதில் ரச்சிதாவுக்கு பெரிய மேடையைப் போட்டுக் கொடுத்தது.
டைட்டிலை வெல்லாவிட்டாலும் கூட ரசிகர்களின் மனங்களை வென்று திரும்பினார் ரச்சிதா. பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ஒரு வருடமாகி விட்டதை சமீபத்தில்தான் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இப்போது ரச்சிதா குறித்த ஒரு ஹேப்பி நியூஸ்வந்துள்ளது. அதுதான் அவர் சினிமாவில் நடித்திருக்கும் தகவல்.
பல்வேறு வெற்றி படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக விளங்கிய ஜேஎஸ்கே சதீஷ், தற்போது ஃபயர் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த ஜே எஸ் கே சதீஷ், தற்போது ஃபயர் என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தங்க மீன்கள், குற்றம் கடிதல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், மதயானை கூட்டம், தரமணி, புரியாத புதிர் மற்றும் விரைவில் வெளியாக உள்ள அண்டாவை காணோம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தேசிய விருதும் பெற்றுள்ளார்.
சதீஷ் தயாரிக்கும் ஃபயர் படத்தில்தான் ரச்சிதா மகாலட்சிமியும் நடித்துளளார். பிக் பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் , சாக்ஷி அகர்வால் ஆகியோரும் படத்தில் உள்ளனர். காயத்ரி ஷான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படம் தமிழகத்தையே உலுக்கிய உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் விறுவிறுப்பான த்ரில்லர் படமாகும் .மேலும் இப்படம் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்தும் ,அவற்றை எவ்வாறு அணுகுவது என்பது போன்ற மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும் தொடர்ந்து தவறான செயல்களில் தெரிந்தே ஈடுபடும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் சகஜமாக நடமாடும் நிலையில் பெண்கள் தெரியாமல் தவறு செய்தாலும் அவர்களை நமது சமூகம் வேறு மாதிரி பார்க்கிறது.
இந்த சமூகப் பார்வை மாற்றினால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாகும் ஏனென்றால் இவ்வாறு இருப்பது இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கும் நல்லதல்ல என்னும் கருத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டு செல்லும் .

இவ்விஷயங்கள் எல்லாம் சிறிதும் சுவாரஸ்யம் குறையாமலும் அதேசமயம் சமுதாய விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் ஃபயர் எடுத்துரைக்கும் என்றும் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான திரைப்படமாக இது இருக்கும் என்றும் இயக்குனர் ஜே எஸ் கே சதீஷ் கூறினார். படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ரச்சிதாவை வெள்ளித் திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்!
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}