ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்

Sep 12, 2025,11:23 AM IST

சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் பலருக்கும், குறிப்பாக மாற்றுதிறனாளிகள் பலருக்கும் வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுத்து, அவர்களுக்கு அடையாளத்தை கொடுத்து, பல உதவிகளை சத்தமே இல்லாமல் பல ஆண்டுகளாக செய்து வருவது அனைவருக்கும் தெரியும். தற்போது இதில் அடுத்த கட்டமாக இலவச கல்வி தரும் முயற்சியில் அவர் இறங்கி உள்ளது பலரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


இதற்காக அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அறிவிப்புதான் பலரையும் வியக்க வைத்துள்ளது, நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி பிறகு படிப்படியாக வளர்ந்து, ஹீரோவாக, டைரக்டராக வளர்ந்துள்ளவர். சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக வளர்ந்தாலும், குரூப் டான்சாக இருந்த போது துவங்கிய தனது உதவி செய்யும் பணியை இன்றும் தொடர்ந்து செய்த வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது சேவையை ஒரு போதும் கைவிடாமல் செய்து வருகிறார்.




லாரன்ஸ் ஏற்கனவே முனி, காஞ்சனா படத்தின் 3 பாகங்களை எடுத்து அதில் வெற்றியும் பெற்றார். தற்போது அடுத்த கட்டமாக காஞ்சனா 4 படத்தை அவர் இயக்கி, நடிக்க போவதாக சமீபத்தில் செய்திகள் வெளி வந்தன. இதில், பூஜா ஹெக்டே  பேயாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் காஞ்சனா 4 பற்றிய அறிவிப்பை லாரன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே அறிவித்துள்ளார். அதோடு தனது சமூக பணியில் அடுத்த முயற்சியாக இலவச கல்வியை வழங்க உள்ளதையும் அறிவித்துள்ளார்.


லாரன்ஸ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில், நான் வளர்த்த எனது பசங்க முன்னிலையில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன், காஞ்சனா 4 வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது. எந்த படம் ஒப்பந்தம் ஆனாலும் அந்த அட்வான்ஸ் பணத்தில் இருந்து ஒரு பகுதியை நல்ல காரியத்திற்காக எடுத்து வைப்பேன். நான் குரூப் டான்சராக இருந்த போது ஒரு வீட்டை வாங்கினேன். இந்த வீட்டை ஆதரவற்றவர்களுக்காக கொடுத்து விட்டு, நாம் வாடகை வீட்டிற்கு சென்று விடுவோமா என யோசித்தேன். அதே போல் அந்த வீட்டை ஆதரவற்ற குழந்தைகளுக்காக கொடுத்து விட்டு நாங்கள் வாடகை வீட்டிற்கு சென்றோம். 


60 குழந்தைகள் பசியாற சாப்பிட்டு, வசிக்கும் இந்த இடத்தில் இலவசமாக கல்வி கொடுத்தால் என்ன என யோசித்தேன். அதன் காரணமாக சிறிய பள்ளியை அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் மாற்றினோம். எங்கள் வீட்டில் தங்கி படித்த, வேளாங்கண்ணி என்பவரை நான் துவக்கும் பள்ளிக்கு முதல் ஆசிரியையாக நியமிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என அந்த வீடியோவில் பேசி உள்ளார். 


ராகவா லாரன்ஸ் ஆசிரியையாக அறிமுகப்படுத்திய வேளாங்கண்ணி இந்த வீட்டிலேயே வளர்ந்தவர். அவரும் நெகிழ்ச்சி பிளஸ் மகிழ்ச்சியுடன் தான் ஆசிரியையாக பணியாற்றப்போவது குறித்து உருக்கமாக தெரிவித்தார்.


லாரன்ஸ் வெளியிட்ட இந்த வீடியோவிற்கும் அவரது இந்த முயற்சிக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், ஆதரவுகளும் குவிந்து வருகின்றன. பெரிய மனசுதான் ராகவா லாரன்ஸுக்கு.. இன்னும் பல காஞ்சனாக்கள் வர வேண்டும்.. அப்போதுதான் ராகவா லாரன்ஸின் தாராள உதவிகளும் ஏழை, எளிய, வாழ்க்கையின் அடித்தட்டில் இருக்கக் கூடிய மக்களுக்கு எளிதாக போய்ச் சேரும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கொடுமுடி கோவிலும்.. புராண வரலாறும், காவிரி ஆறும் அகத்தியரும்!

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

news

அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

news

அதிரடியாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... சவரனுக்கு 82,000த்தை நெருங்கியது!

news

சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் திடீர் ஐடி ரெய்டு!

news

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை

news

ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2025... இன்று அன்பு பெருகும்

அதிகம் பார்க்கும் செய்திகள்