சென்னை: 80 வயதிலும் ரயில்களில் போளி உள்ளிட்ட திண்பண்டங்களை விற்று வருகிறார் ஒரு தாத்தா. அவர் குறித்த செய்தியும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அவருக்கு உதவத் தான் காத்திருப்பதாகவும், அவர் குறித்த விவரம் தெரிந்தோர் உடனடியாக சொல்லுமாறும் நடிகரும், இயக்குவருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலானது. அதில் ஒரு தாத்தா கையில் போளி உள்ளிட்ட இனிப்பு பதார்த்தங்களுடன் சென்னை புறநகர் ரயிலில் நிற்பது போல இருக்கிறது. அவர் வைத்துள்ள ஒரு அட்டையில் ஸ்ரீ ராகவேந்திரா ஹோம் மேட் ஸ்வீட் போளி என்று எழுதப்பட்டுள்ளது. போளி, அதிரசம் உள்ளிட்டவற்றை அவர் தட்டில் தாங்கியபடி விற்பனையில் ஈடுபட்டிருப்பது போல அதில் இருக்கிறது.
அந்த தாத்தாவுக்கு 80 வயதாவதாக கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. இந்த தள்ளாத வயதிலும் உழைப்பதைப் பாராட்டுவதா அல்லது இந்த வயதிலும் கூட வெளியில் வந்து வேலை பார்த்து சாப்பிடும் அளவுக்கு அவரது குடும்பச் சூழல் உள்ளதை நினைத்து வருத்தப்படுவதா என்று பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த முதியவருக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில், இன்று, சமூக ஊடகம் வழியாக எனக்கு ஒரு பதிவு வந்தது. சென்னை நகரில், 80 வயதான ஒரு மூதாட்டியும் அவரது மனைவியும் இனிப்புகள், போளி செய்து சென்னை ரயில்களில் விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. அவர்களின் மன உறுதி என்னை ஆழமாகத் தொட்டது.
அவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவியாக, நான் ரூ.1,00,000 வழங்கத் தயாராக இருக்கிறேன். இது அவர்களுக்கு சற்று ஆறுதலும், உற்சாகமும் தரும் என்று நம்புகிறேன். கொடுக்கப்பட்ட தொடர்பு எண்ணை பலமுறை முயன்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை. யாருக்காவது அவர்களின் விபரங்கள் தெரிந்தால், தயவு செய்து எனக்கு தெரிவிக்கவும்.
மேலும், நீங்கள் அவர்களை ரயிலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், தயங்காமல் அவர்களிடமிருந்து இனிப்புகளை வாங்கி, அவர்களை எந்த விதத்திலும் ஆதரிக்கவும் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
இந்த முதியவர் குறித்த விவரம் சரிவரத் தெரியவில்லை. அவரது அட்டையில் உள்ள போன் நம்பர் எந்தவிதமான யுபிஐயுடனும் இணைக்கப்படவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}