டெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தோல்வி பயம் காரணமாக தான் அமேதியில் போட்டியிடவில்லை என சொல்லி பாஜக.,விற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். இரண்டிலும் அவர் வெல்வது உறுதியாகி விட்டது.
உண்மையில் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் அங்கு வென்றிருக்கக் கூடும். காரணம், கடந்த தேர்தலில் அங்கு ராகுலை தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தற்போது அங்கு தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி, 2019 லோக்சபா தேர்தலிலும் வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். ஆனால் கேரளாவின் வயநாட்டில் மட்டுமே அவர் வெற்றி பெற்றார். மாறாக உ.பி., மாநிலத்தில் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் பாஜக.,வின் ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்தார். 2024 லோக்சபா தேர்தலில் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார் ராகுல் காந்தி. அதே சமயம் அமேதி தொகுதியில் போட்டியிடாமல் தனது தாய் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் இந்த முறை போட்டியிட்டார்.
தோல்வி பயம் காரணமாக தான் இந்த முறையும் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதனால் தான் அமேதியில் போட்டியிடாமல் பின்வாங்கி, ரேபரேலி தொகுதியில் பாதுகாப்பாக போட்டியிடுகிறார் என பாஜக., சார்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அவற்றை கண்டு கொள்ளாமல், இந்த முறை தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என முழு மூச்சாக களத்தில் வேலை செய்தார் ராகுல் காந்தி.
அவர் சொல்லியபடியே வயநாடு தொகுதியில் காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே தொடர்ந்து மிகப் பெரிய வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். ரேபரேலி தொகுதியிலும் நல்ல வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து சிபிஐ கட்சியின் அன்னி ராஜா போட்டியிடுகிறார். அதே போல் ரேபரேலியில் பாஜக.,வின் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.
ராகுல் காந்தி இனிமேல் உ.பியில் வெல்லவே முடியாது, அவரது கதை முடிந்தது, காந்தி குடும்பமே இனி உ.பியில் தலையெடுக்க முடியாது என்றெல்லாம் பாஜக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கேலி கிண்டல்களுக்கும் பஞ்சமே இல்லை.. ஆனால் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளது காங்கிரஸ். ராகுல் காந்தி ஜெயிப்பது மட்டுமல்லாமல், கடந்த காலங்களில் இழந்திருந்த செல்வாக்கையும் உ.பியில் மீட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}