Bharat Jodo Nyay Yatra.. மணிப்பூரில் தொடங்கியது.. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை!

Jan 14, 2024,05:09 PM IST

இம்பால்: மணிப்பூரின் தெளபால் மாவட்டத்திலிருந்து காங்கிரஸ் இளம் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று தொடங்கியது. இனக் கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மணிப்பூரிலிருந்து ராகுல் யாத்திரை தொடங்கியுள்ளது.


ராகுல் காந்தியுடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரும் இடம் பெற்றுள்ளனர்.


ஏற்கனவே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனது பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தியவர் ராகுல்  காந்தி. அந்த யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய புத்துயிர் கொடுத்தது. சில மாநில தேர்தல்களில் காங்கிரஸுக்கு அது பெரும் வெற்றியைக் கொடுத்தது. அதற்கு சிறந்த உதாரணங்கள்.. கர்நாடகா மற்றும் தெலங்கானா.




இந்த நிலையில் தற்போது தனது 2வது யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையானது, மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபெறவுள்ளது. இனக் கலவரத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம் மணிப்பூர், பெண்களுக்கு எதிராக இங்கு நடந்த மிகக் குரூரமான வன்முறை உலகையே உலுக்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கொந்தளித்துக் கருத்து தெரிவிக்கும் நிலைக்குப் போனது.


இந்த நிலையில்  அப்படிப்பட்ட மணிப்பூரிலிருந்து இன்று தனது 2வது கட்ட யாத்திரையைத் தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. முன்னதாக தலைநகர் இம்பாலிலிருந்து யாத்திரையைத் தொடங்க திட்டமிட்டிருந்தார் ராகுல் காந்தி. ஆனால் அதற்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி தரவில்லை. இதையடுத்து தற்போது யாத்திரையை தெளபால் மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். அங்குள்ள தனியார் இடத்திலிருந்து யாத்திரை தொடங்கியது.




மணிப்பூர் உள்பட 5 வட கிழக்கு மாநிலங்கள் வழியாக இந்த யாத்திரை தொடர்ந்து, மகாராஷ்டிரா வரை செல்லவுள்ளது. மணிப்பூரில் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தொலைவுக்கு யாத்திரை செல்லவுள்ளது.  முன்னதாக, ஆங்கிலோ - மணிப்பூர் போரில் கொல்லப்பட்ட தியாகிகளின் நினைவாக தெளபாலில் அமைக்கப்பட்டுள்ள கோங்ஜோம் போர் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு ராகுல் காந்தி யாத்திரை தொடங்கியது. இரவு இம்பாலில் ராகுல் காந்தி தங்கி ஓய்வெடுத்த பின்னர் நாளை மீண்டும் யாத்திரை தொடங்கும்.


மொத்தம் 66 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறவுள்ளது. 6700 கிலோமீட்டர் தொலைவுக்கு யாத்திரை நீளவுள்ளது. 15 மாநிலங்களைச் சேர்ந்த 110 மாவட்டங்களை யாத்திரை கவர் செய்யவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த 2வது யாத்திரை பெருமளவில் காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக்கும் லாபம் தரலாம் என்று அந்தக் கட்சி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்