சென்னை :தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற இடங்களில் வெப்பச்சலனத்தால் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கேரள மாவட்டம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல்வேறு மக்கள் தங்களின் குடும்பங்களையும் உறவினர்களையும் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நிலச்சரிவு மற்றும் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது கடந்த 10 முதல் 12 நாட்கள் வரை கனமழை பெய்து பெய்து வந்தது. அப்போது அதிகபட்சமாக 150 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகி இருந்தது. குறிப்பாக வயநாடு பகுதிகளில் 300 மில்லி மீட்டர் வரை மழை கொட்டி தீர்த்தது. அதனால் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து கடைசியாக பெருமழை பெய்துள்ளது.
நிலச்சரிவைக் கணிக்க முடியாது:
இந்த தொடர் மழை காரணமாக மண்ணின் ஈரப்பதம் அதிகமாக இருந்த நிலையில் வயநாட்டில் மீண்டும் நேற்று மழை பெய்தது. இதன் காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நாம் மழையை கணிக்கலாம். நிலச்சரிவை முன்கூட்டியே கணிக்க முடியாது. ஆனால் முன்கூட்டியே மண்ணின் தன்மையை ஆய்வு செய்திருந்தால் இது பாதுகாப்பற்ற பகுதியாக அறிவித்திருக்கலாமே தவிர மழையால் இந்த இடத்தில் இன்று நிலச்சரிவு ஏற்படும் என்பதை சரியாக சொல்லுவதற்கு வாய்ப்பே கிடையாது.
கேரளாவில் படிப்படியாக மழையின் அளவு குறையும். குறிப்பாக மத்திய கேரளா பகுதியான கொச்சி ,இடுக்கி, எர்ணாகுளம் பகுதிகளில் மழை மேகங்கள் உள்ளன. ஆனால் வயநாடு பகுதிகளில் மழையின் மேகங்கள் இல்லை. கடந்த இரண்டு நாட்களில் பெய்த கன முதல் மிக கனமழை போல் பெய்வதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் ஒரு சில இடங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம்.
கர்நாடகத்தில் மழை நீடிக்கும்:
கர்நாடகாவை பொருத்தவரை கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கும். மேற்கு திசை காற்றின் வேகம் குறைந்தாலும் கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, உத்தர்கன்னட, தச்சின கன்னட, பெங்களூர் போன்ற பகுதிகளில் கனமழை தொடரும். அதேபோல் தமிழ்நாடு, உள் மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வெப்ப சலன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்று மழை:
நீலகிரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}