சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வெயில் அதிகரித்து வரும் நிலையில், வட கடலோரப் பகுதிகளில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது.மேலும் வரும் நாட்களில் வெப்ப நிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனிடைய இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை 87 சதவீதம் என்ற சராசரி அளவை விட 106% கூடுதலாக மழைப்பொழிவு இருக்குமாம்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க நிலையில், கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். அதேபோல் கர்நாடகாவிலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
{{comments.comment}}