தமிழ்நாட்டில் மீண்டும் சூடு பிடிக்கும் போகும் மழை ..சென்னை , வடகடலோர மாவட்டங்களில் வெயில் குறையும்!

Jun 17, 2024,10:14 AM IST

சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆகிய மாவட்டங்களில் மீண்டும் பருவமழை பரவலாக பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்த மாத இறுதியில் பருவக்காற்று தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.


மேலும் வடகடலோர மாவட்டங்களில் வெயில் குறைந்து மீண்டும் இடியுடன் கூடிய கனமழை தொடர கூடும் எனவும்  தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில  பகுதிகளில் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழையும்  பெய்து  வருகிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் வெக்கை அதிகரித்துள்ளது. இப்பகுதியில்  பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவு நேரத்தில் குளுமையும் நிலவி வருகிறது.




இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆகிய மாவட்டங்களில் பருவமழை மீண்டும் தொடங்கி பரவலாக பெய்ய வாய்ப்புள்ளது . குறிப்பாக வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் இனி வரும் நாட்களில் வெயில் குறைந்து இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். இந்த மழை பெய்யும்போது, குறைந்தது 45 நிமிடங்கள் வரை நீடிக்குமாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.


சென்னையில் கடந்த சில நாட்களாகவே வானம் மேக மூட்டமாக இருந்து வந்தது. அதேசமயம், கடந்த 2 நாட்களாக வெயில் வெளுத்தது. இன்று காலை முதல் வானம் மூடி மூடி வருகிறது. கூடவே வெயிலும் வெளுக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

அதிகம் பார்க்கும் செய்திகள்