சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக அநேக இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்கள், விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கோடை காலத்திற்கு குட் பாய் சொல்லிவிட்டு மழைக்காலம் வந்தது போல் தமிழ்நாடே குளுமையான வானிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் குஷியில் உள்ளனர்.
தஞ்சாவூர் - டெல்டா மாவட்டங்கள்:

தஞ்சை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலிலேயே நல்ல மழை பெய்து வருகிறது. அம்மா சத்திரம், கரிசல்குளம், தேபெருமாநல்லூர், திருப்புவனம், புளியம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 16 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. அதன் அடுத்தபடியாக அதிராம்பட்டினத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவானது. தஞ்சையில் இரண்டு சென்டிமீட்டர் மழையும், மதுக்கூரில் 10.6 சென்டிமீட்டர் மலையும் பெய்துள்ளது.
சென்னை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இதன் எதிரொளியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, திருப்போரூர், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
சென்னை நகரிலும் திருமங்கலம் அம்பத்தூர், தொழிற்பேட்டை, கோயம்பேடு, அண்ணா நகர், விருகம்பாக்கம், உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருபுறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. வேலூர், மணலி, அனத்தம்பாடி, ஆத்தூர், மணலூர், நெடுங்குளம், எழிலூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ராமநாதபுரம், திட்டக்குடி, மேலவாசல் வீதி, பேருந்து நிலையம், சம்பை, மாங்காடு, தனுஷ்கோடி, போன்ற இடங்களில் பரவலாக கன மழை பெய்துள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள தரங்கம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது வேரோடு சாய்ந்த அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், காளவாசல், அவனியாபுரம், பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. அதேபோல திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது.
நாகை:
நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலில் நல்ல மழை பெய்து வருகிறது. வெளிபாளையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, புத்தூர், கணக்குப்பிள்ளை போன்ற பகுதிகளிலும் , வேளாங்கண்ணி, வேதாரண்யம், தலை ஞாயிறு, போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லையில் மூன்றாவது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது.அங்கு கன மழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெய்த கனமழையால் ரயில்வே தரைப்பாளத்தில் தேங்கிய நீரில் அரசு பேருந்து சிக்கியது. அங்கு 40 அடி உயரத்தில் மழை நீர் தேங்கியது. இதன் பின்னர் பேருந்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
கரூர்:
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெயில் பதிவாகும் கரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
விருதுநகர்:
நேற்று விருதுநகரில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் விருதுநகரில் மிக கனமழை கொட்டி தீர்த்தது.குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூளக்கரை, அல்லம்பட்டி, பாண்டியன் நகரில் கன மழை பெய்தது.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் மழை

இதற்கிடையே, அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைபெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரத்தில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவானது. புதுச்சத்திரம் 2.3 சென்டிமீட்டர் மழையும், ராசிபுரம் திருச்செங்கோடு தலா ஒரு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 8.7 சென்டிமீட்டர் மழையும், அரண்மனைபுதூரில் 2.3 சென்டிமீட்டர் மழையும் பதிவானது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 8.6 சென்டிமீட்டர் மழை பதிவானது. திண்டுக்கல்லில் 5.3 சென்டிமீட்டர் மழை, நத்தம் 2.8 சென்டிமீட்டர் மழை, 1.3 சென்டிமீட்டர் மழை, கொடைக்கானலில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவானது.
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
{{comments.comment}}