சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நீடித்து வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதே சமயம் பகலில் கடுமையான வெயிலும் நிலவி வந்தாலும் மாலை நேரங்களில் மழை பெழிந்து குளுமையான சூழல் நிலவுகிறது. இது தவிர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மிக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து 110 கிராமங்கள் நீரில் மூழ்கின. மக்கள் செய்வதறியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் இன்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!
ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ
{{comments.comment}}