சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இது ரஜினியின் 170வது படமாகும். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவருடன் இணைந்து அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், மஞ்சுவாரியர், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உலக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாக தயாராகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு தொடர்ந்து எந்தவொரு பிரச்சனையும் இன்றி இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. ஆடியோ லான்ச் விழாக்களில் ரஜினிகாந்த் பேசுவதும் வைரலாவது வழக்கம்.
ஜெயிலர், லால் சலாம் ஆடியோ லாஞ்சை தொடர்ந்து இன்று வேட்டையன் படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் என முக்கிய கலைஞர்கள் பங்கேற்றனர். அனிருத் விழா நாயகனாக பங்கேற்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}