எப்போ.. ஓ மை காட்.. ஸாரி.. திருவண்ணாமலை மண் சரிவு பலி குறித்து.. ரஜினிகாந்த் கருத்து!

Dec 09, 2024,09:39 AM IST

சென்னை: திருவண்ணாமலையில் நடந்த மண் சரிவில் சிக்கி 7 பேர் பலியானது குறித்து நடிகர் ரஜினிகாந்த், எப்போ என்று கேட்டு வருத்தம் தெரிவித்தார்.

கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களில் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். அதைத் தொடர்ந்து வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் கூலி படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.



இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள், திருவண்ணாமலை மண் சரிவு மரணம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் எப்போ என்று கேட்டார். செய்தியாளர்கள் மழை சமயத்தில்நடந்த சம்பவம் என்று விளக்கிக் கூறிய பிறகு, ஓ மை காட் என்று கூறிய ரஜினிகாந்த் ஸாரி என்று வருத்தம் தெரிவித்தார்.

அடுத்த படம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இல்லை, கூலிக்குப் பிறகுதான் எல்லாமே என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!

news

கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!

news

என்னுள் எழுந்த (தீ)!

news

144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்