சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த 170 வது படத்துக்கு தயாராகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கொச்சி செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 170வது படத்தின் படப்பிடிப்புக்காக கொச்சிக்கு செல்கிறேன். இப்படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும். 170 ஆவது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
ஜெயிலர் படம் நன்றாகப் போகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியிடப்பட்டு 18 நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் ரூ. 315 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் இறங்கி விட்டார் ரஜினிகாந்த். மறுபக்கம், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாபாரத்தில் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அடுத்தடுத்து ரஜினிகாந்த் படங்கள் வரவுள்ளதால் அவரது ரசிகர்கள் ஹேப்பி மோடிலேயே உள்ளனர்.
கொடுமுடி கோவிலும்.. புராண வரலாறும், காவிரி ஆறும் அகத்தியரும்!
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
அதிரடியாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... சவரனுக்கு 82,000த்தை நெருங்கியது!
சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் திடீர் ஐடி ரெய்டு!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2025... இன்று அன்பு பெருகும்
{{comments.comment}}