- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : முருகப் பெருமானுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்று தான் சஸ்திர பந்தம். பாம்பன் சுவாமிகளால் அருளப்பட்ட இந்த நான்கு வரி மந்திரம் நம்முடைய வாழ்வில் இருக்கும் எப்படிப்பட்ட துன்பத்தையும் போக்கக் கூடியதாகும்.
வெறும் 55 எழுத்துக்கள் மட்டும் கொண்ட இந்த மந்திரத்தை ஒரு புள்ளி வரைபடமாக வரைந்தால் வேலின் வடிவம் தோன்றும். வேல் வேறு, முருகன் வேறு கிடையாது என்பது முருக பக்தர்கள் அனைவருக்கும் தெரியும். சஸ்திர பந்தத்தில் வரும் இந்த 55 எழுத்துக்களையும் கீழிருந்த மேலாக வாசித்து, பிறகு மீண்டும் மேலிருந்து கீழ் இறங்கி வருவது போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்.
அதாவது முருகப் பெருமானின் திருவடியில் அருள் வேண்டி துவங்கி, அவரது தலை வரை படிப்படியாக வணங்கி, பிறகு மீண்டும் அவரது திருவடிகளை வந்து அடைவதாக அர்த்தம்.
சஸ்திர பந்தம் :
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேலவா.
(பதம் பிரித்தது)
வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா
மாலை பூண் ஏம திற மால் வலர் தே – சாலவ
மா பாசம் போக மதி தேசு ஆர் மா பூதம்
வா பாதம் தா வேலவா
விளக்கம்:
தூயவனே! வேதாந்த விலாசக் கடவுளே! பேரின்பமெனுஞ் சுவானுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்வோனே, வன்மை சான்ற திருமாலுக்கும், வல்லவர்களுக்கும், கடவுளே, என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும், ஒழிய ஞானமும், புகழுள்ள, பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க.
படிக்கும் முறையும், பலன்களும் :
தொழில் வளர்ச்சி ஏற்பட, செல்வ செழிப்பு உண்டாக, கழுத்தை நெருக்கும் கடன் பிரச்சனை தீர, வாழ்க்கையில் உயர் நிலையை அடைய, உயர் பதவி கிடைக்க, தீய எண்ணங்கள், பயம், நோய் ஆகியவை நீங்க என அனைதஅது விதமான நன்மைகளும் ஏற்பட இந்த பதிகத்தை படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன் நெய் விளக்கு ஏற்றி வைத்தோ இந்த மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். முருகப் பெருமானுக்குரிய செவ்வாய் கிழமை, சஷ்டி, கிருத்திகை, விசாகம் ஆகிய நாட்களில் படிக்க துவங்குவது சிறப்பு. தினமும் படிப்பது மிகவும் விசேஷம். தினமும் படிக்க முடியாதவர்கள் வாரத்திற்கு ஒருநாள் செவ்வாய்கிழமையில் மட்டும் இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதை காண முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}