சென்னை: 2024-25 ஆம் ஆண்டுக்கான நடப்பு கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி காலண்டரில் சமீபத்தில் பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டது. இதன்படி கல்வியாண்டிற்கான மொத்த வேலை நாட்கள் 220ஆக இருந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
2024-2025 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 220 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 210 வேலை நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது பத்து வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர புதிய விடுமுறை நாட்களையும் அரசு அறிவித்துள்ளது.
அரசு விடுமுறை நாட்கள்:
ஜூன் 17 -பக்ரீத் பண்டிகை
ஜூலை 17-மொகரம் பண்டிகை
ஆகஸ்ட் 15 குடியரசு தினம்
ஆகஸ்ட் 27 கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 17 மிலாடி நபி
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி
அக்டோபர் 11 ஆயுத பூஜை
அக்டோபர் 12 சரஸ்வதி பூஜை
அக்டோபர் 31 தீபாவளி,
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் உள்ளிட்ட மொத்தம் 11 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து 10 நாட்கள் குறைக்கப்பட்டு,2024-25 ஆம் ஆண்டில் 210 நாட்களாக திருத்தப்பட்ட பள்ளி நாட்காட்டி வெளிவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}