ரோம்: துனிசியாவில் இருந்து 60 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு பயணிக்கும் பெரும்பாலானோர் சட்ட விரோத பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளும் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்திலேயே முடிகின்றன. இதனைக் கட்டுப்படுத்த கடலோர போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த சட்ட விரோத பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில், வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து சட்ட விரோதமாக சுமார் 60 அகதிகளுடன் படகு ஒன்று இத்தாலி நோக்கி பயணித்தது. கடந்த 17ம் தேதி பயணத்தை தொடங்கிய படகை திடீர் என ராட்சத அலை தாக்கியது. இதில் அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த படகில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
2 மனைவி.. வாரத்துல ஆளுக்கு 3 நாள்... ஞாயிற்றுக்கிழமை லீவு.. டைம்டேபிள் எப்பூடி!
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
சென்னையில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில்.. பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது
50 சட்டசபைத் தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்கள்.. அண்ணாமலைக்கு எத்தனை?
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
{{comments.comment}}