வெறும் 10வதுதான் படிச்சிருக்கீங்களா.. பாஸ் பண்ணியாச்சா?.. ரெப்கோ வங்கியில் வேலை ரெடியா இருக்கு!

Feb 20, 2024,02:22 PM IST

சென்னை : ரெப்கோ வங்கியில் Jewel Appraiser பதவிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


இதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். 


இந்த பணிக்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு மட்டுமே. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு 07.02.2024 அன்று ரெப்கோ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 28.02.2024 ஆகும். இந்த பதவிகளுக்கு ஆப்லைனில் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். 




கல்வித்தகுதி :


10ம் வகுப்பு அல்லது எஸ்எஸ்எல்சி பாஸ் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் இந்தியராக இருத்தல் அவசியம். தங்க நகைகள் பற்றிய விபரங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும். தென்னிந்திய மொழிகள் ஏதாவது ஒன்றில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Jewel Appraiser course முடித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.


வயது வரம்பு - 31.12.2023 தேதியின்படி 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை  - தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து, எந்த தவறும் இல்லாமல் அனைத்து விபரங்களையும் நிரப்பி, விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :


The General Manager (Admin), Repco bank Ltd, 

P.B.No.1449,

Repco Tower,

No:33, North Usman road,

T.Nagar, Chennai - 600017.


வேலைவாய்ப்பு குறித்த மேலும் விபரங்கள், விண்ணப்ப விபரம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை www.repcobank.com  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்