மெரீனாவில் கோலாகலம்.. தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா!

Jan 26, 2025,09:20 AM IST

சென்னை: நாட்டின் 76வது குடியரசு தின விழா சென்னை மெரீனா கடற்கரையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் மூவண்ணக் கொடியை ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.


நாட்டின் 76வது குடியரசு தின விழா எழுச்சியுடன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் கர்தவ்யா பாதையில் இன்று சிறப்பான அணிவகுப்புடன் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.




சென்னையில் கடற்கரை காந்தி சிலை அருகே நடந்த விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நீதிபதிகள், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  தேசியக் கொடியேற்றும் முன்பு ஹெலிகாப்டர் மூலம் ரோஜாப் பூக்கள் தூவப்பட்டது. 


தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநில கலைக்குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு துறைகளின் அலங்கார ரதங்களும் அணிவகுத்து வந்தன. வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 




முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பதக்கங்கள்:


வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், தீயணைப்பு காவலர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவுக்கு வழங்கப்பட்டது. இவர் கொரோனா காலத்தில் 500க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய உதவினார்.


சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தேனிமாவட்டத்தைச் சேர்ந்த ரா.முருகவேலுக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் பெ.சின்னகாமணன், கி.மகாமார்க்ஸ், க.கார்த்திக், கா.சிவா, ப.பூமாலை ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


மெரீனா கடற்கரையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்தும் மாற்றப்பட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!

news

புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!

news

மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்

news

அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு

news

புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்