குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Apr 09, 2025,02:21 PM IST
மும்பை: வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று ஆர்.பி.ஐ.கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம். இந்த ரெப்போ வட்டி விகிதம் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமல் 6.5 சதவீதம் என்ற அளவில் இருந்து வந்த நிலையில் , கடந்த பிப்ரவரியில் 0.25 சதவீதம் குறைந்தது. 




இந்நிலையில் இன்று ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் அரை சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.  உணவுப்பொருள் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பில் வட்டி விகிதத்தை குறைந்துள்ளது ரிசர்வ் வங்கி.



இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைப்பினால் வீடு,வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. இந்த வட்டி குறைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சி தந்த அதிர்ச்சி!

news

பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

news

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!

news

இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!

news

பெற்று வளர்த்த தாய்மடி

news

மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)

news

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??

news

ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்

அதிகம் பார்க்கும் செய்திகள்