- வர்ஷினி
சென்னை: மொத்தப் படத்தின் ஷூட்டிங்கும் லண்டனில்தான் நடக்கிறது.. திகிலடிக்க வைக்கும் திருப்பங்கள் நிறைந்த படமாக ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும் சில நொடிகள் படம் வளர்ந்து வருவதாக இயக்குநர் வினய் பரத்வாஜ் கூறியுள்ளார்.
இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி ஹீரோவா நடித்துள்ள படம்தான் "சில நொடிகளில்". இத்திரைப்படத்தை எஸ்குவேர் புரொடக்ஷன்ஸ் யுகே & புன்னகை பூ கீதா தயாரிக்கிறார்கள். ரிச்சர்ட் ரிஷி தவிர, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
திருமணமான தம்பதியைச் சுற்றி நடக்கும் பல மர்மங்கள் நிறைந்த திகிலூட்டும் பின்னணியில் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. முழுப்படமும் லண்டனில் சூட் செய்யப்படுகிறது.
இயக்குநர் வினய் பரத்வாஜ் ஊடக உலகிலும் திரைப்படத் துறையிலும் அனுபவம் மிக்கவர். கலர்ஸ், ஸ்டார் பிளஸ், ஸ்டார் விஜய் போன் டிவி சேனல்களில் சர்வதேச டாக் ஷோக்களை நடத்தி வெற்றி பெற்றவர். வினய் பரத்வாஜ் தமிழில் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் தான் சில நொடிகளில்.
ஜீன்ஸ், மின்னலே போன்ற பல வெற்றி திரைப்படங்களைத் தந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மலேசியாவை சேர்நத புன்னகை பூ கீதாவுக்குச் சொந்தமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் சில நொடிகளில் படத்தை வெளியிடுகிறது.
இந்த படத்திற்கு அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னணி இசையை பாலிவுட்டின் பிரபல இசை அமைப்பாளர் ரோஹித் குல்கர்னி இசையமைத்துள்ளார். ஏஆர் ரஹ்மானின் ஏஎம் ஸ்டுடியோவில் சவுண்ட் டிசைனிங் செய்யப்பட்டுள்ளது. மேலும், படத்தில் உள்ள 5 பாடல்களுக்கும் 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர் என்பதுதான் விசேஷமே. மசாலா காபி, ஸ்டாகாட்டோ மியூசிக் பேண்ட், ஜார்ன் சுர்ராவ், தர்ஷனா கே.டி - ரோஹித் மாட் ஆகியோரே அவர்கள்.
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}