நம் நாட்டில் நிறைய பேருக்கு சொல் விளையாட்டுக்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் தமிழில் உள்ள சொல் விளையாட்டுகள் போல வேறு மொழியில் இருக்குமா என்று தெரியவில்லை.
சொல் விளையாட்டுக்கள் என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்..அது வேறு ஒன்றும் இல்லை. நாம் கேட்கும் கேள்விக்கு அதில் ஒளிந்திருக்கும் பொருளை கண்டுபிடிப்பதே சொல் விளையாட்டுக்கள். அதே தான் நவ நாகரிக காலகட்டத்தில் விடுகதைகள் என்றும் கூறி வருகின்றனர். அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சிந்தனைகளை தூண்டவே விடுகதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விடுகதைகள் நமது அறிவையும், சிந்தனையையும், யோசனையையும் தூண்டி விடுபவை. நம்மை கேள்வி கேட்க வைப்பவை, சிந்திக்க வைப்பவை. இதனால் நாமளும் ஒரு அறிவாளியாக இருக்க மாட்டோமா என பலரும் கேட்கப்படும் விடுகதைகளுக்கு ஆர்வமாக பதில் கூறி வருகின்றனர். அப்படி பதில் கூறும்போது நம் மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி.

எல்லோரும் அறிவாளியா இருக்கம்போது நீங்களும் அப்படி இருக்க வேண்டாமா.. சரி நீங்களும் அறிவாளியான்னு செக் பண்ணிப் பார்ப்போமா.. வாங்க!
1. எங்க அக்கா சிவப்பு குளித்தால் கருப்பு அது என்ன..?
2. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன..?
3. ஒருத்தன் வாளுக்கு உலகமே நடுங்கும் அவன் யார்..?
4. ஒரு அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன..?
5. ஒரு கரண்டி மாவில் ஊரெல்லாம் தோசை அது என்ன..?
6. தண்ணீரில் கரைந்திடுவான் ஆனால் வெயிலில் வைத்தால் உயிர் பிழைப்பான் அது என்ன..?
7. திறந்த பெட்டியை மூட முடியாது அது என்ன..?
8. பல்லே துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அது என்ன..?
9. நமக்கு சொந்தமான ஒன்றை ஊரே அதிகம் பயன்படுத்தும் அது என்ன..?
10. குண்டன் குழியில் விழுவான் குச்சிப்பையன் தூக்கி விடுவான் அவன் யார்..?
(பதில்கள்: 1. அடுப்புக்கரி, 2. வெண்டைக்காய், 3. தேள், 4. பற்கள், 5. நிலா, 6. உப்பு, 7. தேங்காய், 8. சீப்பு, 9. பெயர், 10. பணியாரம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}