ரோஸ் டே: காதலின் நறுமணம் வீசும் ஒரு தொடக்கம்

Feb 07, 2026,02:14 PM IST

காதல் என்பது உணர்வுகளின் சங்கமம். அந்த உணர்வுகளை வார்த்தைகளால் சொல்வதை விட, ஒரு மலரை நீட்டிச் சொல்வது மிகுந்த அழகு. அந்த வகையில், உலகமெங்கும் காதலர்களாலும் நண்பர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'காதலர் வாரத்தின்' (Valentine's Week) முதல் நாளாக 'ரோஸ் டே' (Rose Day) கொண்டாடப்படுகிறது.ரோஜா மலரின் வரலாற்றுப் பின்னணிரோஜா மலர்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையிலான பிணைப்பு இன்று நேற்று தொடங்கியதல்ல; இது பல நூற்றாண்டுகள் பழமையானது. 


காதர் தின வாரத்தின் துவக்க நாளாக ரோஸ் டே எப்போது முதல் கொண்டாடப்படுகிறது என்ற சரியான வரலாறு தெரியவில்லை. ரோஜாக்கள் முதன்முதலில் சீனாவில் பயிரிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆசிய கலாச்சாரத்தில் இவை காதல், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன.பண்டைய ரோமானிய மற்றும் கிரேக்க புராணங்களில், ரோஜாக்கள் காதல் தெய்வங்களான வீனஸ் மற்றும் அப்ரோடைட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. விக்டோரியன் காலத்தில், 'புளோரியோகிராபி' (Floriography) எனப்படும் மலர் மொழி மூலம், ஒவ்வொரு பூவுக்கும் ஒரு அர்த்தம் கற்பிக்கப்பட்டது. அதில் சிவப்பு ரோஜாக்கள் ஆழமான மற்றும் உறுதியான காதலின் அடையாளமாக மாறின. டிஸ்னியின் 'பியூட்டி அண்ட் தி பீஸ்ட்' போன்ற நவீன கதைகளிலும் ரோஜா காதலின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.


ரோஸ் டே 2026: முக்கியத்துவம் : 




ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 7-ஆம் தேதி ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இது வரவிருக்கும் காதலர் தினத்திற்கான ஒரு முன்னோட்டமாகும். காதலர் தின வாரத்தின் துவக்க நாளாக ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி காதலை அல்லது அன்பை வெளிப்படுத்தும் புரொப்போஸ் டே, பிப்ரவரி 09 சாக்லேட் டே, பிப்ரவரி 10 டெடி டே, பிப்ரவரி 11 பிராமிஸ் டே, பிப்ரவரி 12 ஹக் டே, பிப்ரவரி 13 கிஸ் டே, பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.


காதலர் வாரத்தின் துவக்கமாக வரும் ரோஸ் டே நாளில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ரோஜாக்களைப் பரிசளிப்பதன் மூலம் தங்கள் இதயத்தில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்துகின்றனர். இது வெறும் காதலர்களுக்கான நாள் மட்டுமல்ல; நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் ரோஜாக்களை வழங்கி உறவை மேம்படுத்தும் ஒரு இனிய வாய்ப்பாகும்.ரோஜா வண்ணங்களும் அவற்றின் அர்த்தங்களும் ரோஜாக்களின் நிறத்தைப் பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடுகிறது. சரியான நபருக்குச் சரியான உணர்வை வெளிப்படுத்த இந்த வழிகாட்டி உதவும்:


ரோஜாவின் நிறம், உணர்த்தும் பொருள் : 


சிவப்பு ரோஜா - ஆழமான காதல், காதல் உணர்வு, பேரார்வம்.

இளஞ்சிவப்பு (Pink) ரோஜா -பாராட்டு, நன்றியுணர்வு, இனிமை, மகிழ்ச்சி.

வெள்ளை ரோஜா - தூய்மை, அமைதி, புதிய தொடக்கம்.

மஞ்சள் ரோஜா - நட்பு, மகிழ்ச்சி, கதகதப்பான உறவு.

ஆரஞ்சு ரோஜா - ஆர்வம், வசீகரம், ஆவல்.

ஊதா (Lavender) ரோஜா - முதல் பார்வையில் காதல், கம்பீரம்.

நீல ரோஜா - மர்மம், தனித்துவமான அன்பு.

பச்சை ரோஜா - நல்லிணக்கம், வளர்ச்சி, அமைதி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்