துபாய்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் பயன்படுத்தும் அதி நவீன சொகுசு காரான ஆரஸ் வகை கார்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் விற்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது.
விலாடிமிர் புடின் பயன்படுத்தும் அதி நவீன கார்களில் ஒன்றுதான் ஆரஸ் எனப்படும் அதி நவீன சொகுசு கார். ஆரஸ் நிறுவனம் தயாரிக்கும் மிக விலை உயர்ந்த சொகுசுக் கார் இது. இந்தக் காரை தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் விற்பனை செய்யவுள்ளனர். அதாவது ரஷ்யாவிலிருந்து இந்தக் காரின் உதிரி பாகங்களை எமிரேட்ஸுக்கு அனுப்பி அங்கு அசெம்பிள் செய்து விற்கவுள்ளனர்.
இதுதொடர்பான அறிவிப்பை ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி மன்டுரோவ் தெரிவித்தார். தற்போது ஆரஸ் செனட் கார்களை முதல் கட்டமாக எமிரேட்ஸில் தயாரிக்கின்றனர். இந்தக் காரைத்தான் புடின் பயன்படுத்தி வருகிறார். இந்தக் கார் தவிர்த்து விரைவில் ஆரஸ் கொமன்டன்ட் எஸ்யுவி கார்களையும் எமிரேட்ஸில் தயாரிக்கவுள்ளனர். இதுதொடர்பான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் மன்டுரோவ் தெரிவித்தார்.
இதுதவிர எமிரேட்ஸில் டீலர்களை நியமிக்கவும் ஆரஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இங்கு விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கார்களைத் தயாரிக்கும் பிரிவையும் அது தொடங்கவுள்ளது.
எமிரேட்ஸை, மையமாக வைத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆரஸ் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தையும் ரஷ்யா வைத்துள்ளது. எதிர்காலத்தில் சவூதி அரேபியாவுக்கும் தனது விற்பனைப் பிரிவை விரிவாக்கும் திட்டம் ரஷ்யாவிடம் இருப்பதாகவும் தெரிகிறது.
ஆரஸ் கார்களின் வரலாறு
2013ம் ஆண்டு முதல்தான் ஆரஸ் கார்கள் விற்பனை தொடங்கியது. புடின் விருப்பத்தின் பேரில் உருவாக்கப்பட்ட கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை புடின் வெளிநாட்டுக் கார்களைத்தான் அதிகம் பயன்படுத்தி வந்தார். ஆனால் அதை நிறுத்தி விட்டு ரஷ்யத் தயாரிப்புக் கார்களைப் பயன்படுத்த முடிவெடுத்தார். அதன் விளைவாகப் பிறந்ததுதான் ஆரஸ் கார்கள்.
புடின் மட்டும் ஆரம்பத்தில் இதைப் பயன்படுத்தி வந்தார். பின்னர் இதை பொதுமக்களுக்கும் விற்க முடிவெடுத்து வர்த்தகம் விஸ்தரிக்கப்பட்டது. தற்போது வெளிநாடுகளுக்கும் இந்தக் கார் விற்பனைக்கு வருகிறது.
ஆரஸ் செனட் செடன் ரக காரின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 3 கோடியே 69 லட்சத்து 18 ஆயிரத்து125 ரூபாய் ஆகும். இதுவேர ஆரஸ் கொமன்டன்ட் கார் விலை 4 கோடி வரை விலை வரும். என்ன வாங்கலாமா?
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}