மாஸ்கோ: ரஷ்யா அதிபர் விலாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. தேதிகள் பரிசீலனையில் உள்ளதாகவும், முடிவானதும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடன் கடும் போரில் ஈடுபட்டுள்ளது ரஷ்யா. மறுபக்கம் அமெரிக்காவுடனும் பனிப் போர் நீடிக்கிறது. பல்வேறு சவால்களிலும், சிக்கலிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. அதில் இந்தியாவும் ஒன்று.

ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் இதுதொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவுக்கு வரவுள்ளதாக கிரம்ளின் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பேச்சுக்கள் நடந்து வருவதாகவும், தேதிகள் முடிவானதும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது இந்திய பயணத்தின்போது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, புடின் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடைசியாக இரு தலைவர்களும் கடந்த அக்டோபரில் ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது சந்தித்துப் பேசினர் என்பது நினைவிருக்கலாம். அந்த சந்திப்பின்போதுதான் இந்தியாவுக்கு வருமாரு புடினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று தற்போது புடின் இந்தியா வரவுள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக முக்கியமாக புடினுடன் இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவால்தான் முடியும் என்று பல்வேறு நாடுகளும் கருதுகின்றன. எனவே புடினின் இந்திய வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவின் நீண்ட கால நண்பனாக விளங்குவது ரஷ்யா. நேரு காலத்திலிருந்தே ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சகோதர நட்பு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}