துரைமுருகனுக்கு "பாடம்" எடுத்த சீமான்.. விரைவில் "சாட்டை"யடி பதில்கள்.. காத்திருப்பில் "தம்பிகள்"!

Mar 08, 2023,12:04 PM IST
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிரடி பேட்டி ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பேட்டியை பெரிய அளவில் வைரலாக்க கட்சித் தொண்டர்கள் இப்போதே தயாராகி விட்டனர்.

நாம் தமிழர் கட்சி குறித்தும், அதன் தலைமை குறித்தும், அதன் கொள்கை குறித்தும், அதன் போக்கு குறித்தும் தொடர்ந்து விவாதங்கள் இருந்தபடியேதான் உள்ளது. அதிலும் சமீப காலமாக பெரும் சர்ச்சைகளும், கடும் மோதல்களும் வெடிப்பது வழக்கமாகி விட்டது.

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது அருந்ததியின மக்கள் குறித்து சீமான் பேசியது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து போராட்டங்களும் வெடித்தன. சென்னையில்  நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டது.





இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், சீமானை ஒரு பேட்டி எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில் கூறுகையில், பொதுத்தேர்வு எழுத செல்லும் மாணவனின் மனநிலையோடு அண்ணனை நேர்காணல் எடுக்கச் சென்றேன்.  தமிழர் அரசியல் ,இந்திய அரசியல்,உலக அரசியல் என ஒரு பேராசிரியர் மாணவருக்கு பாடம் எடுப்பது போல என் கேள்விகளுக்கு பதில் தந்தார். லட்சக்கணக்கான தம்பிகளின் கேள்விகளுக்கான அண்ணனின் பதில்கள் விரைவில் சாட்டையில் என்று அவர் போட்டுள்ளார்.

இந்தப் பேட்டியில் சீமான் என்னெல்லாம் கூறியிருக்கிறாரோ, அது என்ன மாதிரியான அதிர்வுகளை ஏற்படுத்தப் போகிறதோ என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகையில், மறுபக்கம் வழக்கம் போல இந்தப் பேட்டியை வைரலாக்க நாம் தமிழர்  கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்