சல்மான் கானின் வைர வாட்சின் விலை தெரியுமா?.. கேட்டாலே தலைசுத்துதே

Aug 07, 2023,09:53 AM IST
மும்பை : பாலிவுட்டின் மிகப் பெரிய ஸ்டார் நடிகரான சல்மான் கானின் வைர வாட்ச் பற்றிய தகவல் தான் திரையுலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த காஸ்ட்லி வாட்சின் விலை பற்றி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பாலிவுட்டின் பிஸியான நடிகர்களின் ஒருவரான சல்மான் கான் கடைசியாக கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. தற்போது டைகர் 3 என்ற ஸ்பை த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடித்து வருகிறார். இதில் ஷாருக்கானும் கெஸ்ட் ரோலில் முக்கிய கேரக்வரில் நடித்துள்ளார். இதனால் பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக டைகர் 3 இருந்து வருகிறது. 



படங்களில் நடிப்பதுடன் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பல ஆண்டுகளாக சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக்பாஸ் ஓடிடி வெர்சனையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் சல்மான் கான் கடந்த சில ஆண்டுகளாக அணிந்து வரும் தங்க நிற, வைர வாட்ச் அவனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பல மேடை நிகழ்ச்சிகளில் சல்மான் கான் இதை அணிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 57 வது பிறந்த நாளில் தான் இந்த வாட்ச் அணிந்த படி சல்மான் கான் முதல் முறையாக போஸ் கொடுத்திருந்தார்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த வாட்சின் விலை உள்ளிட்ட பல சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. சல்மான் கான் அணிந்திருப்பது ரோலக்ஸ் பிராண்டின் தங்க கோட்டிங் கொடுக்கப்பட்ட வைர வாட்ச் ஆகும். இதன் விலை ரூ.46.8 லட்சம் ஆகும். 18 காரட் தங்கத்தில், வைர கற்கள் பதிக்கப்பட்ட வாட்ச் ஆகும். பச்சை கலந்த நீல நிறத்தால் ஆன இந்த வைர வாட்ச் சல்மான் கானின் லக்கி  வாட்ச்சாம். இதை அவர் பல ஆண்டுகளாக அணிந்து வருகிறாராம். 

சல்மான் கான் அணிந்துள்ள இந்த வைர வாட்ச் அவரது அப்பா சலீம் கான், சல்மான் கானுக்கு பரிசாக கொடுத்ததாம். குழந்தையாக இருக்கும் போது தனது அப்பாவின் பிரேஸ்லேட்டை அடிக்கடி சல்மான் கான் விளையாட்டாக அணிந்து கொள்வாராம். சிறு வயதில் இருந்தே பிரேஸ்லெட் என்றால் சல்மான் கானுக்கு மிகவும் விருப்பமாம். அதனால் தான் அவரது தந்தை, தற்போது காஸ்ட்லியாக இருக்கும் பிரேஸ்லெட் மாடல் வாட்சை பரிசாக வழங்கினாராம்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்