மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து சல்மான் கான் சார்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அன்டர்வேர்ல்ட் டான் லாரன்ஸ் பிஷ்னாய் என்பவரது குரூப் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
பந்திரா காவல் நிலையத்தில் சல்மான் கான் சார்பில் அவரது வழக்கறிஞர் குழு புகாரைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள லாரன்ஸ் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது குழுவினர் மும்பையில் ஆக்டிவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. சிறைக்குள் இருந்தபடி தனது கும்பலை லாரன்ஸ் செயல்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த லாரன்ஸ்தான், பிரபல பஞ்சாபி மொழிப் பாடகர் சித்து மூஸே வாலாவின் படுகொலையை தனது கும்பல் மூலம் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.
சனிக்கிழமை பிற்பகலில் சல்மான் கானுக்கு ஒரு இமெயில் வந்துள்ளது. அதில், கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டரும், லாரன்ஸின் நெருங்கிய கூட்டாளியுமான கோல்டி பிரார், சல்மான்கானை சந்திக்க விரும்புவதாக கூறப்பட்டிருந்தது. மேலும் சல்மான் கானுக்கு அதில் மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பந்த்ரா காவல்நிலையத்தில் சல்மான் கான் குழுவினர் புகார் கொடுத்தனர்.
லாரன்ஸ், சல்மான் கானுக்கு மிரட்டல் விடுப்பது இது புதிதல்ல. ஏற்கனவே 2018ம் ஆண்டும் இதேபோல மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து லாரன்ஸ் கும்பல் மிரட்டல் விடுத்து வந்ததால், சல்மான் கானுக்கான பாதுகாப்பை மகாராஷ்டிர காவல் துறை ஒய்பிளஸ் ஆக அதிகரித்தது. சல்மான் கான் பல ஆண்டுகளாகவே தனது பாதுகாப்புக்காக தனிக் குழுவை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பாடிகார்டாக குர்மீத் சிங் எனப்படும் ஷெரா நிழ���் போல சல்மானை தொடர்ந்து வருகிறார் என்பதும் நினைவிருக்கலாம்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}