சிகிச்சை பணம் இல்லாமல் கஷ்டபடுறேனா? .. வதந்திகளுக்கு முடிவுகட்டிய சமந்தா

Aug 06, 2023,09:29 AM IST
சென்னை : நடிகை சமந்தா தனது சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், ரூ.25 கோடி உதவி கேட்டு காத்திருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் பரவி வரும் வதந்திகளுக்கு நடிகை சமந்தா தனது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தார். நடிகை நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு சினிமாவிலும், சோஷியல் மீடியாவிலும் செம பிஸியாக இருந்து வந்த சமந்தா, தான் மயோசிடிஸ் என்ற நோய் எதிர்ப்பு சக்தி தானாக குறையும் வினோத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த ஆண்டு அறிவித்தார். இருந்தாலும் தான் கமிட்டான படங்களை முழுவதுமாக நடித்து முடித்தார்.



இந்நிலையில் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டு, உடல்நிலையில் கவனம் செலுத்த உள்ளதால் சினிமாவில் இருந்த ஓராண்டிற்கு பிரேக் எடுத்துக் கொள்ள போவதாக சமீபத்தில் அறிவித்தார் சமந்தார். இதனால் தான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களக்காக வாங்கிய அட்வான்சை திருப்பி செலுத்தி வந்தார். தற்போது ஓய்வு, தியானம், யோகா என ஈடுபட்டு வரும் சமந்தா, தனது அன்றாட நடவடிக்கைகளை இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். விரைவில் இவர் அமெரிக்கா சென்று சிகிச்சையை துவக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் சமந்தா தனது சிகிச்சைகாக ரூ.25 கோடி பண உதவி கேட்டு காத்திருப்பதாக சோஷியல் மீடியாவில் வதந்தி பரவியது. இந்த தகவலை மறுத்துள்ள சமந்தா, இது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் அவரே விளக்கமும் அளித்துள்ளார். அதில், மயோசிடிஸ் சிகிச்சைக்கு 25 கோடியா? யாரோ உங்களை தவறாக குழப்பி உள்ளார்கள். அதில் சிறிதளவு தொகையை மட்டுமே நான் சிகிச்சைக்காக செலவிடுகிறேன். நான் செய்த வேலைகளுக்கு மிக குறைவாக நான் சம்பளம் வாங்கியதாக நான் நினைக்கவில்லை. அதனால் என்னை நான் எளிதாக கவனித்துக் கொள்வேன்.

மயோசிடிஸ் என்பது ஒரு பாதிப்பு நிலை. ஆயிரக்கணக்கானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து பொறுப்புடன் தகவல்களை பகிருங்கள். என்னுடைய சிகிச்சை பற்றிய தகவல்களை நானே தருவேன் என குறிப்பிட்டுள்ளார்.  சிகிச்சைக்கு பிறகு அந்த நோய் இருந்து மீண்டு வர உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சமந்தா நடித்து கடைசியாக வெளியான சாகுந்தலம் படம் தோல்வி படமாக அமைந்தது. அடுத்ததாக சிடேடல் இந்தியா, குஷி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்