சென்னை : நடிகை சமந்தா தான் பாலி தீவில் உற்சாகமாக பொழுதை கழிக்கும் போட்டோக்கள், வீடியோக்களை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இணையத்தை அதிரிபுதிரி ஆக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் விவாகரத்து பற்றிய தகவல்கள் மீடியாக்கள் பரவ துவங்கியது முதல் சமந்தா பற்றி என்ன தகவல் வெளி வந்தாலும் அது உடனடியாக டிரெண்டாகி வந்தது.
இவர்களின் விவாகரத்து பற்றிய தகவல்களே பல மாதங்களாக டாப் நியூசாக ஓடிக் கொண்டிருந்தது.. அது சற்று ஓய்ந்த நிலையில் தான் மயோசிட்டிஸ் என்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்த சமந்தா, இதற்காக சிகிச்சை பெற்று வரும் போட்டோக்களையும் வெளியிட்டு மீண்டும் ரசிகர்கள் மற்றும் மீடியாக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டார்.
அந்த பரபரப்பும் சற்றும் ஓய்ந்த நிலையில் சமீபத்தில், தான் சினிமாவில் இருந்து ஒரு வருடத்திற்கு பிரேக் எடுக்க போவதாகவும், உடல்நிலையில் க��னம் செலுத்த போவதாகவும் அறிவித்து ரசிகர்களுக்கு அடுத்த ஷாக் கொடுத்தார் சமந்தா. இதனால் சமந்தாவிற்கு ரூ.12 கோடி வரை இழப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் உடல்நிலையை காரணமாக அவர் சொல்லி உள்ளதால் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.
சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ள உள்ளதாக அறிவித்தாலும் தினமும் தான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை இன்ஸ்டாகிராமில் போட்டோவாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார் சமந்தா. காலையில் யோகா பயிற்சி செய்வது முதல், சமீபத்தில் சத்குருவின் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தது வரை அனைத்து போட்டோக்களையும் சமந்தா வெளியிட்டு வருகிறார். தற்போது சமந்தா தனது தோழியுடன் மாலி தீவில் ஓய்வெடுத்து வருகிறார்.அங்கு அவர் செய்யும் அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
முதல் முறையாக குட்டை தலை முடியுடன் இருக்கும் போட்டோவையும் சமந்தா வெளியிட்டுள்ளார். பாலி தீவில் தான் பார்த்து ரசித்த விஷயங்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். விரைவில் தனது நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}