சோயப்பை சானியா உதற இதுதான் காரணமாம்.. நாத்தனார்களும் செம கடுப்பில் இருக்காங்களாம்!

Jan 21, 2024,02:02 PM IST
ஹைதராபாத்: சோயப் மாலிக் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததால்தான் வெறுத்துப் போய் அவரை விவாகரத்து செய்து விட்டாராம் சானியா மிர்ஸா. இதுதான் அவர்களது பிரிவுக்கு முக்கியக் காரணம் என்று பாகிஸ்தான் மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்தியாக பேசப்படுவது சோயப் மாலிக்கின் மறுமணம்தான். கணக்குப் படி பார்த்தால் இதை 3வது கல்யாணம் என்றுதான் சொல்ல வேண்டும். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக் அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்தவர். அவருக்கும் இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்ஸாவுக்கும் கடந்த 2010ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தேறியது. இரு நாடுகளிலும் மிகப் பெரிய பேசு பொருளாக இந்தத் திருமணம் இருந்தது.



இந்தத் திருமணம் பரபரப்பாக மாற முக்கியக் காரணமே.. சோயப் மாலிக்குக்கும், ஆயிஷா என்ற பெண்ணுக்கும் இடையிலான தொடர்பு குறித்த தகவல்கள் வெளியானதுதான். சானியாவைத் திருமணம் செய்யவிருந்த நிலையில் தன்னை சோயப் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும், தங்களுக்கு திருமணம் நடந்து விட்டதாகவும், தன்னை மோசடி செய்து விட்டு சானியாவை மணக்க அவர் முயல்வதாகவும் ஆயிஷா புகார் கூறவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து பேசப்பட்டு பின்னர் சானியா - சோயப் திருமணம் முடிந்தது. அதன் பிறகு துபாயில் வீடு வாங்கிய சானியா மிர்ஸா, அங்கிருந்தபடி குடும்பம் நடத்தி வந்தார். இந்தத் தம்பதிக்கு இஷான் என்ற மகனும் பிறந்தான். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நிலையில்தான் தற்போது இருவரும் பிரிந்துள்ளனர். இதை பலரும் எதிர்பார்க்கவில்லை.

இருவரும் தனித்து வாழ்வதாக வந்த செய்திகளையும் கூட பலர் நம்பவில்லை. பிரியும் அளவிலான மோதலாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது சோயப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை மணந்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

சனா ஜாவேத் ஏற்கனவே ஒருவரைத் திருமணம் செய்து, விவாகரத்து செய்தவராம். இவருக்கும், சோயப்புக்கும் இடையே கடந்த 3 வருடமாக பழக்கம் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. இதனால்தான் சானியா மிர்ஸா, சோயப் மாலிக்கை பிரியும் முடிவுக்கு வந்ததாகவும் சொல்கிறார்கள்.

சோயப் மாலிக்கைப் பொறுத்தவரை அவர் பலருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு பெண்களுடன் அவர் பழகி வந்ததால்தான் வெறுத்துப் போய் சானியா மிர்ஸா அவரிடமிருந்து விலகும் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சானியாவின் நாத்தனார்களும் கோபம்:




சோயப் மாலிக்கின் லேட்டஸ்ட் திருமணத்திற்கு அவரது குடும்பத்திலேயே ஆதரவு இல்லை என்று சொல்கிறார்கள். சனாவை மணந்த நிகழ்வின்போது  சோயப்பின் குடும்பத்தினர் யாருமே வரவில்லையாம். குறிப்பாக சோயப்பின் சகோதரிகள் அனைவருமே அவரது செயலால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனராம்.

சானியா மிர்ஸாவை, சோயப் ஏமாற்றியது நியாயமற்றது, இருவரும் பிரிந்திருக்கக் கூடாது என்று அவர்கள் வருத்தத்துடன் உள்ளார்களாம்.  இந்த விவாகரத்தை அவர்கள் ரசிக்கவில்லையாம். சானியா மிர்ஸா மீது மிகுந்த பாசத்துடன்தான் இன்னும் உள்ளார்களாம்.

சோயப்பின் மறுமணம் குறித்து சானியா மிர்ஸா இதுவரை பகிரங்கமாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அமைதியாக இருக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

news

தியேட்டர்களை விழுங்கப் போகிறதா ஓடிடி.. OTT vs Theatre!

news

அவள் எழுகிறாள்.. அதனால் ஒளிர்கிறாள்.. She Rises, She Shines!

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் திமுக...காங்கிரசின் கொந்தளிப்பிற்கு இது தான் காரணமா?

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

கண்களின் பார்வையில்.. காதல் கொண்டேனே!

news

25 சீட்டுதானா.. அல்லது கூடுதலாக கிடைக்குமா.. எதிர்பார்ப்பில் காங்கிரஸ்.. என்ன நடக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்