- சங்கமித்திரை
சென்னை: சூப்பர் கமர்ஷியல் பார்முலா படம் ஒன்றில் நடிகர் சந்தானம் அடுத்து அசத்தியுள்ளார்.
காமெடியனாக வலம் வந்து ஒரு கலக்கு கலக்கிய சந்தானம் தற்போது ஹீரோவாக மாறி அவ்வப்போது ஏதாவது அதிரடியாக அசத்திக் கொண்டிருக்கிறார். புதிதாக அவர் ஒரு சூப்பர் கமர்ஷியல் படத்தில் நடித்து முடித்துள்ளார் சந்தானம்.

கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்புசெழியன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள புதிய படத்தில் சந்தானம் கலக்கியிருக்கிறார். வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது கோபுரம் பிலிம்ஸ்.
அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக நடிக்கிறார். இது அவரது முதல் படமாகும். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மறைந்த மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டி. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் பிருந்தா மற்றும் பாபா பாஸ்கர்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
இது சந்தானம் பாணி நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் கலந்த சூப்பர் கதையுடன் கூடிய படம் என்று இயக்குநர் நம்பிக்கையோடு சொல்கிறார்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
{{comments.comment}}