Santhi Sinnathambi Poem: விடுமுறைக்காகக் காத்திருந்தோம்.. காத்திருந்தோம்!

Aug 05, 2026,01:34 PM IST

- மதுரை செ. சாந்தி சின்னத்தம்பி


விழுந்து விழுந்து படித்து

படித்ததை எழுத்தில் வடித்து 


ஆண்டுத் தேர்வின் இறுதி நாளில் 

விடுமுறைக்காகக் காத்திருந்தோம்! காத்திருந்தோம் !


வாசலில் காகம் கரைய 

அத்தை மகனோ, சித்தி மகளோ 

உறவு வரும் நேரம் என்று பார்த்திருந்தோம்!பார்த்திருந்தோம்!


விடிகாலை வேளையிலே வீட்டு மணி ஒலிக்கையிலே

வந்ததே உறவென்று வரவேற்றோம்!வரவேற்றோம்!




அம்மாவின் அன்பாலே உபசரிப்புப் பண்பாலே 

அனைவருமே ஒன்றுகூடி

உண்டிருந்தோம்!உண்டிருந்தோம் !


ஓடையில நீராடி ஒத்தகல்லு மேடையிலே

ஊருகதை பேசித்தானே 

சிரித்திருந்தோம்! சிரித்திருந்தோம் !


உறங்கா இரவுகளில் 

பரமபதமோ தாயமோ,

பல்லாங்குழியோ அந்தாக்ஷரியோ 

விழித்திருந்தோம்!விழித்திருந்தோம் !


தடுக்கி விடும் நேரத்தில் தாங்கிப் பிடிக்க உறவுகளும் 

பரிதவிக்கும் போதினிலே பந்தங்களும் தேவையென 

உணர்ந்திருந்தோம்! உணர்ந்திருந்தோம்!


ஓடி மறைந்தன நாட்கள் 

வேகம் எடுத்துத் தாவிப் பறந்தன நாட்கள் 

இனி அடுத்த கோடைவிடுமுறை 

என்று வருமென 

ஏங்கித் தவித்திருந்தோம்!தவித்திருந்தோம் !


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்