- சசிகலா விஸ்வநாதன்
நானும் யோசித்தேன்....
ஏன் எல்லோரும்
தாயிடம் காட்ட வேண்டிய அன்பைப் பற்றியே,
இத்தனை நீளமாகவும் அகலமாகவும் ஆழமாகவும்
பேசுகிறார்கள்?
ஏன்
தாய் என்பவளை இறையின் உயரத்திற்கு உயர்த்துகிறார்கள்?
தாய் என்பவள்
அனைத்தையும் தாங்குவாள்;
மௌனமாக...
நிந்தை
உதாசீனம்,
கடுஞ்சொல்,
முகச் சுளிப்பு
எவருக்கும் வெளியிடாமல்.
என்றும் எதையும்
கடந்து போவாள்;
அதனால் என்ன; என்பது போல்!

பெரிய தவறுகளை எல்லாம் சிறியதாக ஒதுக்கவும்,
சிறிய சந்தோஷங்களை பெரிதாக கொண்டாடவும்,
அறிந்தவள் அவள்!
கண்ணீர் நீர் துளிர்க்கும் முன்
சேலைத் தலைப்பு
முன் நீளும்!
அசதி என நினைக்கும்
முன்
பஞ்சு மெத்தை மடி கிடைக்கும்!
பதமாக நீவி விடும்
பாத்திரம் தேய்த்து
தேய்ந்து போன குச்சி கைகள்!
நிதானமாக சாப்பிடு!
பத்திரமாக போய் வா,!
ரொம்ப அலையாதே!
தினசரி செவியில் போதும் ,
கரிசன வார்த்தைகள்!
தெய்வத்தால் ஆகாததெல்லாம்
தாயால் ஆகுமன்றோ!
ஆனாலும்;
ஏன் அவளை அப்படி உயர்த்துவதில்லை; அன்றாட வாழ்வில்!
வாய் பேச்சோடு சரி!
சரி! சரி!
அதற்கும் அவள் சிணுங்குவதில்லை !
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
தாயிடம் வைக்கும் அன்பு
நானும் உன்னைப் போலவே....!
உழைப்பின்றி உயர்வில்லை!
காணாமல் போன இன்னொரு குழந்தை யார்?.. அவள் யாரென்று தெரியுமா? (4)
மக்களே உஷார்...வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலையும் கிடுகிடுவென உயர்கிறது
என் எல்லை எனக்குத் தெரியும்!
எருக்கஞ்செடி.. ஆன்மீகம் மட்டுமல்ல.. பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கியமானது!
கயிலை அறக்கட்டளை - சைவ சமயச் சொற்பொழிவாளர் பயிற்சித் திட்ட பட்டமளிப்பு விழா
தங்கத்தில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) அதிரடி எச்சரிக்கை!
{{comments.comment}}