எம்.ஆர். ராதா ஆன்மீக வேடங்களில் நடிச்சிருக்காரே.. மோடி வேடம் குறித்து சத்யராஜ் விளக்கம்!

May 18, 2024,03:41 PM IST
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் சத்யராஜ் நடிக்கப் போவதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை இதுவரை சத்யராஜ் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம் சத்யராஜ் அளித்துள்ள பதிலாக ஒரு விளக்கம் உலா வருகிறது.

நடிகர் சத்யராஜ் நடிக்காத வேடம் இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டின் மிகப் பெரிய சித்தாந்த ஆளுமையான பெரியார் வேடத்தில் நடித்தவர் சத்யராஜ். அவரே கூட ஒரு பெரியாரிஸ்ட்தான். பெரியாரின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர். போகும் இடமெல்லாமல் பெரியார் குறித்துப் பேசாமல் இருக்க மாட்டார்.

அப்படிப்பட்ட சத்யராஜ், பிரதமர் நரேந்திர மோடி பயோ பிக்கில் நடிக்கப் போவதாக, அதுவும் மோடியாகவே நடிக்கப் போவதாக வெளியான தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது உண்மையா என்றுதான் பலரும் கேட்டு வருகின்றனர். ஆனால் சொல்லி வைத்தாற் போல அத்தனை திரைப்பட பிஆர்ஓக்களும், முக்கியஸ்தர்களும் இந்த செய்தியை பரப்பி வருகின்றனர். இதனால் இது உண்மையாகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.



இந்த நிலையில் சத்யராஜ் அளித்துள்ள விளக்கமாக ஒரு பதில் தற்போது உலா வருகிறது. அதில், எனக்கும் இது புது செய்தியாக இருக்கிறது. யாரும் மோடி பயோ பிக் குறித்து என்னிடம் பேசவில்லை. வாய்ப்பு வந்தால் பார்க்கலாம். யாரோ கிளப்பி விட்டுள்ளனர் என்று தெரிகிறது. எம்ஆர். ராதா மிகச் சிறந்த நாத்திகவாதி. ஆனால் அவரே ஆன்மீக வேடங்களில்  நடித்துள்ளார் என்று சத்யராஜ் கூறியதாக அந்த விளக்கம் தெரிவிக்கிறது.

சத்யராஜ் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக ஏதாவது விளக்கம் வெளியிட்டால்தான் குழப்பம் தீரும். அதுவரை சத்யராஜ், நரேந்திர மோடி கேரக்டரில் நடிக்கவிருப்பதாக வெளியான செய்தி மேலும் வலுப்பெறவே செய்யும்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்