டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு, டிசம்பர் முதல் வாரத்தில் சம்பவ இடத்திற்கு வருகை தரவுள்ளது. முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான இந்தக் குழு, தனது ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கி, வருகைக்கான திட்டத்தையும் வகுத்துள்ளது.
விசாரணை அதிகாரிகளுடன் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்து, வழக்கமான தகவல்களுக்கு அப்பாற்பட்டு, விசாரணையை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த குறிப்புகளையும் வழங்கியுள்ளனர். சிபிஐ நடத்தி வரும் விசாரணையை இந்தக் குழு உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று விஜய்யின் மிழக வெற்றி கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், சிபிஐ விசாரித்து வருகிறது.

சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே தவெக தலைமை அலுவலகத்திற்குச் சென்று, கூட்ட நெரிசல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்துள்ளனர். கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள, சிபிஐ அதிகாரிகள் மேம்பட்ட 3டி லேசர் ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சம்பவ இடத்தை அளந்து வரைபடமாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் வரவுள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணிக்கு வர விஜய்யிடம் காங்கிரஸ் வைத்த டிமாண்ட்...ஆடிப்போன தவெக
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
வானுலகின் பேரொளியில், ஒரு பொக்கிஷம்.. Divine Gift!
மலை போல வந்ததா? மழை போல வந்ததா? .. ஒரு மொழித் தேடல்!
வேகம் விவேகமானதா..?
செம்மையாக வாழ வேண்டும்.. எப்படி தெரியுமா.. ஸ்டீபன் ஹாக்கிங் போல!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்!
மகாலட்சுமியின் வடிவம்.. பூமாதேவியின் அம்சம்..வராகி அம்மன் சிறப்புகள்!
{{comments.comment}}