கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Apr 18, 2025,05:44 PM IST

சென்னை: கோடை விடுமுறை இன்று முதல் துவங்கி உள்ள நிலையில், கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  கூறியுள்ளார்.



2024-25 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வுகள் கோடை வெயில் காரணமாக முன்கூட்டியே நடத்தப்படும் என கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 

1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 7 முதல் 17 வரையிலும், 

6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8 முதல் 24 வரை வரையிலும் தேர்வுகள்  நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும்  ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்கி விட்டது.இதற்கிடையே தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.




அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு  இன்று நிறைவுற்று  கோடை விடுமுறை தொடங்குகிறது. இதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கான அறிவுரையை வழங்கி உள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், 


கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். 


தண்ணீர் அதிகம் பருகுங்கள்.


சிறுவருக்கான புத்தக வாசியுங்கள்.


பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள். 


அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள். 


திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள்.


 பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுகிறேன்.


 மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்பிற்கு வாருங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்