சென்னை: காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அந்த சந்தோஷ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு என மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே கால ஆண்டு விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால் இந்த ஐந்து நாட்களில் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி நீங்கலாக இரண்டு நாட்கள் மட்டுமே தேர்வு விடுமுறை விடப்படுவதால், மேலும் இரண்டு நாட்கள் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்படுமா என பெற்றோர்கள் மாணவர்களும் எதிர்பார்த்து காத்து வந்தனர்.
தற்போது அந்த அறிவிப்பு வந்து விட்டது. அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு கூடுதலாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
அம்மாக்கள்தான் பாவம்.. வீடுகள் அல்லோகல்லப்படும்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}