சென்னை: எஸ்டிபிஐ போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள படம் தான் அமரன். இப்படம் நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், 3 நாட்களில் ரூ.100 கோடியையும் தாண்டியுள்ளது. இப்படத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, சிம்பு உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.

அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் புதிய மைல் கல் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அமரன் படம் குறித்த சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.
காஷ்மீர் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் உள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின்ர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் ராயப்பேட்டை இஸ்லாமியர்கள் இயக்கம் போராட்டம் நடத்துவதாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் படம் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மட்டும் இன்றி இப்படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் வீடு மற்றும் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யிடம்.. காலை 11 மணி முதல் 4 மணி வரை.. சிபிஐ விசாரணை.. நாளை விசாரணை இல்லை என தகவல்
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
{{comments.comment}}