சட்லஜ் நதிக்கரையில்.. உடல் பாகங்கள்.. கண்டெடுப்பு.. யாருடைய உடல்?.. டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவு!

Feb 07, 2024,01:56 PM IST

சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் நதிக்கரையில் விபத்துக்குள்ளாகி காணாமல் போய் விட்ட வெற்றி துரைசாமியைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் அந்தப் பகுதியில் சில உடல் பாகங்கள் கிடைத்து்ளனவாம். 


இது யாருடைய உடல் பாகம் என்பதை அறிய டிஎன்ஏ சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


சைதை துரைசாமி, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டுள்ளவர். சென்னை மாநகராட்சி மேயராக இருந்தவர். தற்போது தீவிர அரசியலில் அவர் இல்லை. இவரது மனித நேய அகாடமி ஐஏஎஸ் கோச்சிங்குக்கு பெயர் பெற்றது.




சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. சிறந்த தொழிலதிபராக வலம் வந்தாலும் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக விளங்குகிறார் வெற்றி துரைசாமி. இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திரில்லர் படம் எடுப்பதற்கான லொகேஷன் தேடி இமாச்சலப் பிரதேசம் லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றார். உதவியாளரான கோபிநாத் உடன் இருந்தார். 


அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற கார் நிலை தடுமாறி சட்லஜ் ஆற்றல் கவிழ்ந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காரை மீட்டனர். கார் ஓட்டுனர் டென்சின் சடலமாக மீட்கப்பட்டார். கோபிநாத் ஆற்றங் கரை ஓரமாக  காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வெற்றி துரைசாமியைக் காணவில்லை. அவர் மாயமானார்.


மகன் காணாமல் போன தகவல் அறிந்ததும் பதறித் துடித்த சைதை துரைசாமி  சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். தனது மகன் குறித்த தகவல் கொடுப்போருக்கு ரூ. 1 கோடி சன்மானம் தருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.


கடந்த மூன்று தினங்களாக வெற்றி துரைசாமியின் உடலை ராணுவம்,  விமானப்படை, இந்திய கடற்படையைச் சேர்ந்தவர்கள் தீவிர தேடுதல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  அப் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சட்லஜ் ஆற்றங்கரையில் வெற்றியின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது, மூளை உள்ளிட்ட சில மனித உடல் பாகங்களும் கிடைத்துள்ளன.  பாகங்களை கைப்பற்றி டி என் ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்