ஈரோடு: விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் நிறைவேற்றச் சொன்ன பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு விஜயமங்கலத்தில் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் பேசுகையில், தவெக தலைவர் விஜய் வரும் 18-ம் தேதி விஜயமங்கலம் வரும்போது காவல்துறை என்னென்ன வேண்டுகோள் வைத்தார்களோ அதைவிட கூடுதலாக பாதுகாப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு அடிப்படையில் என்னென்ன தேவைகள் குறிப்பிட்டு இருக்கிறார்களோ அனைத்தும் நாளை மதியத்திற்குள் நிறைவு செய்யப்படும்.

கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் பாட்டில்களில் குடிநீர் வழங்கப்படும். 20 இடங்களில் கழிப்பறை வசதியும், 3 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும். 60 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு 20 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அடிப்படையில் 40 கேமராக்கள் பொருத்தப்படும். அவசர தேவைக்காக 40 வாக்கி-டாக்கிகள், 24 ஆம்புலன்ஸ், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் இடம் பெறுவார்கள். 20 சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் நிரப்பப்படும்.
காவல்துறை சார்பில் 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். க்யூ ஆர் கோடு இல்லாமல் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு அனைவரும் வரலாம். விஜயை பார்த்து விட்டு மகிழ்ச்சியாக செல்லலாம். கூட்டம் முடிந்த பின்னர் வெளியேற 14 வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி
அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை
குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு
ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்
விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்
True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!
{{comments.comment}}