கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து.. "ஏய்.. ஓய்.. போடா".. என்னாச்சு சீமானுக்கு!

Apr 18, 2023,03:14 PM IST

சென்னை: மீனவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்ட செய்தியாளருக்கு சரியாக பதிலளிக்காமல், அவரைப் பார்த்து போடா என்று சீமான் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை மெரீனா கடற்கரை அருகே உள்ள லூப் சாலையில் காலம் காலமாக மீனவர்கள் கடைகள் போட்டு மீன் விற்பனை செய்வது வழக்கம். கடலிலிருந்து பிடித்து வரப்படும் மீன்கள் இங்கு வைத்து விற்கப்படும். மக்களுக்கும் புதிது புதிதாக மீன்கள் கிடைப்பதால் இந்த கடைகளில் மீன் வாங்க மக்கள்கூட்டம் அலை மோதும். 


மெரீனா கடற்கரை மட்டுமல்லாமல், சென்னையையொட்டியுள்ள அனைத்துக் கடற்கரைப் பகுதிகளிலும் இதுபோன்ற மீன் விற்பனைக் கடைகள் உள்ளன. இவற்றை மீனவர்களே நடத்துகிறார்கள். இந்த நிலையில் மெரீனா கடற்கரை லூப் சாலை மீன்கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளப் போவதால், இந்த "ஆக்கிரமிப்பு" மீன் கடைகளை அகற்ற நோட்டீஸ் கொடுத்தது. சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சரியே என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.


இதை எதிர்த்து மீனவர்கள் தொடர் போராட்டங்களில் குதித்துள்ளனர். படகுகள், மீன்பிடி வலைகளை சாலையில் போட்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து அவர்களிடம் குறைகள் கேட்டார்.


பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, கடலில் பேனா சின்னம் வைப்பதால் கடலுக்கு ஆபத்து ஏற்படாது என்று சொல்கிறார்கள். அப்படியெனில், கடலுக்கு வெளியே கரையில் கடைகள் வைப்பதால் என்ன பாதிப்பு கடலுக்கு வந்து விடும். பேனா சின்னம் வைக்க காட்டும் அக்கறையை மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையிலும் அரசு செலுத்த வேண்டும்.




காலம் காலமாக இங்கு மீன் விற்பனை நடத்தி வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு இந்தத் தீர்ப்பை நீதியரசர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.


அப்போது செய்தியாளர்கள் சீமானிடம், ஓபிசி பிரச்சினை தொடர்பாக கேள்வி கேட்டனர். அதற்கு பதில் கூறிய சீமானுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த உரையாடல் இதோ:


"ஓபிசின்னா என்ன.. நீ சொல்லு.. அதர் பேக்வர்ட் காஸ்ட். சரி.. எனக்கு வார்த்தை தெரியலை.. நீ ரொம்பப் படிச்சிருக்கே.. நான் முட்டாப்பய..  அதர் பேக்வர்ட் காஸ்ட், எனக்கு என்ன கொடுத்தே..  கர்நாடகத்தில் என்ன கொடுத்தே ஒன்னேகால் கோடி பேர் கர்நாடத்தில் இருக்கேன். ஆந்திராவில் இருக்கேன். மகாராஷ்டிராவில் 26 லட்சம் பேர் இருக்கான்.. நீ என்ன கொடுத்தே.. ஏய்.. அது எவனாவது இருக்கட்டும்.. தம்பி.. இங்க தமிழ்நாட்டுலகன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கா இல்லையா.. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு.. ஏய்... நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு (செய்தியாளர்: ஏய்னு சொல்லாதீங்க).. ஏய்னு சொல்லாம ஓய்னு சொல்லவா.. போடா" என்று கூறி விட்டு நகர்ந்தார் சீமான்.


சீமானுக்கு என்னாச்சு.. வர வர பொது வெளியில் கோபத்தைக் காட்டி வருகிறாரே.. இது தலைவர்களுக்கு  அழகா.. செய்தியாளர் புரியாமல் பேசியிருந்தாலும் கூட அதை அவருக்கு புரியவைத்து விட்டு நகர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திரு��்கும் அல்லவா.. !


சமீபத்திய செய்திகள்

news

கவிதாயினியின் இரவுகள்!

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா.. அப்படின்னு கேட்பவர்களுக்காக.. ஸ்பெஷல் கோதுமை ரவா பொங்கல்!

news

மகர விளக்கு பூஜைக்காக.. சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு

news

Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?

news

நான் பாடும் மெளன ராகம்... A song that never ends!

news

எளியவர், ஏற்றம் கண்டவர்.. சுயசார்பு சிந்தனையை நடைமுறையில் காட்டியவர்!

news

புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்