சென்னை: தவெக தலைவர் விஜய்யை விமர்சிப்பதற்காக, மறைந்த திமுக நிறுவனர் அண்ணா மற்றும் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் ஆகியோரை சனியன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமானின் இந்த பேச்சுக்கு அதிமுக கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது.
விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் சீமான். அவரது பேட்டிகளிலும், பேச்சுக்களிலும் தவறாமல் விஜய் விமர்சனம் வந்து விடுகிறது. கடுமையாக காட்டமாக அவர் விஜய்யை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது விஜய்யை விமர்சிப்பதாக கருதிக் கொண்டு அண்ணா, எம்ஜிஆரை சனியன் என்று அவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் சனிக்கிழமை பிரச்சாரம் மற்றும் அவரது கொள்கை குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் சீமான். அப்போது, அண்ணாவையும், எம்ஜிஆரையும் வச்சிக்கிட்டாப்ள. இதுல என்ன மாற்றம் வந்திருச்சு. இது ஒரு சனியன், இது ஒரு சனியன். இரண்டு சனியன்களையும் சட்டையாத் தச்சுட்டாப்ள. சனிக்கிழமை சனிக்கிழமை கிளம்பிட்டாரு என்று பேசினார் சீமான்.
இதுதான் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமமுக தலைவர் டிடிவி தினகரன், சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஐடி விங் சீமானுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கை:
நம் இயக்கத்தின் தலைவர்கள், தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவர்கள். அவர்களை இழிவுபடுத்தும் அருகதை இங்கு யாருக்கும் கிடையாது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் சமூகநீதியின் சுடர். எளியவர்களை மேடையேற்றி அழகு பார்த்தவர். இன்று இழிசொல் பேசும் சீமான் உட்பட, அடுக்குமொழி வசனம் பேசும் பலரின் மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்தவர் அண்ணா. உங்களைப் போன்றோர் மேடை ஏறக் காரணமான தலைவர் அவர்.
தாங்கள் தலைவராக கருதும் மேதகு பிரபாகரன் அவர்களுக்கே தலைவரானவர் எங்கள் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். நீங்கள் சொல்லும் நோக்கத்திற்கு உங்களை விட பன்மடங்கு அதிகமாக செய்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். உண்மையில் பிரபாகரன் அவர்களோடு நீங்கள் பேசியிருந்தால், உங்களுக்கு அது தெரிந்திருக்கும்.
அப்படிப்பட்ட தமிழினத்தின் உண்மையான தலைவர்களை, அடித்தட்டு மக்களுக்கான திராவிட இயக்கத்தின் சமத்துவத் தலைவர்களைப் பார்த்து நீங்கள் உதிர்த்த அவதூறு வார்த்தை வெட்கக்கேடானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தரந்தாழ்ந்த பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், இதுவரைப் பெற்ற வாக்கையும் மொத்தமாக இழக்கப் போவது உறுதி என்று கூறபபட்டுள்ளது.
மறுபக்கம், தவெகவினரும் சமூக வலைதளங்களில் சீமானை கடுமையாக சாடி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதிரடி சரவெடி... மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றும் சவரனுக்குரூ.720 உயர்வு!
நாமக்கல், கரூர்.. இன்று விஜய் செய்யப் போகும் 2 தரமான சம்பவங்கள்.. பரபரப்பில் களம்!
அண்ணா, எம்ஜிஆர் குறித்து இனியும் அநாகரீகமாக பேசினால்.. சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை
இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமான் பேச்சால் சலசலப்பு!
இன்று நவராத்திரி 6ம் நாள்...அம்பிகையின் வடிவம், பிரசாதம், நிறம், மலர் பற்றிய முழு விபரம்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27, 2025... இன்று பாச மழையில் நனைய போகும் ராசிகள்
சனிக்கிழமை வந்தாச்சு.. நாமக்கல், கரூரில் என்ன பேசுவார் விஜய்?.. குத்தவச்சுக் காத்திருக்கும் கட்சிகள்
வானிலை எச்சரிக்கை: இன்று 6, நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
நாளை கரூர், நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம்: தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுரை!
{{comments.comment}}