டோக்கியோ: ஜப்பானில் கடுமையாக வீசி வரும் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இந்த மாதம் தொடங்கியதில் இருந்து கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிபுயல் நிலவுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து சேவை மற்றும் ரயில் சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு பனி குவிந்து கிடக்கிறது.

ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் அங்குள்ள ஒரு பகுதியான ஆரோமி நகரில் பனி புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 அடி அளவுக்கு சாலைகளில் பனிபடர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக ஆரோமி நகரில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், சாலைகள் மற்றும் ஆங்காங்கே உள்ள பனியை அப்புறப்படுத்து பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளதாக ஜப்பான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இல்லங்கள் தோறும் சக்கரவர்த்தியாய்!
பீகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு!
இருதலைக் கொள்ளியாய் ஆண்கள்.. அங்கீகரிக்கப்படாத மறுபக்கம்.. ஆண்களை கொண்டாடுவோம்!
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
வளம்,நோயற்ற வாழ்வு, உலக அமைதி வேண்டி... தூத்துக்குடியில் காவேரி அம்மன் வழிபாடு!
முதியோர் இல்லம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
அனைத்து பரிமானங்களிலும் ஆண்களே ஆதாரமாய்...!
{{comments.comment}}