பொண்ணுங்க ரொமான்ஸ் பண்ணக் கூடாதா என்ன.. ஷபானா ஆஸ்மி போல்ட் கேள்வி!

Aug 05, 2023,01:21 PM IST
டெல்லி: பெண்கள் என்றால் அவர்கள் ரொமான்ஸ் பண்ணக் கூடாதா என்ன என்று கேட்டுள்ளார் நடிகை ஷபானா ஆஸ்மி.

பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் ஹோம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்திப் படம்தான் ராக்கி அவுர் ராணி கி  பிரேம் கஹானி. இப்படத்தில் ரன்வீர் சிங் ராக்கி வேடத்திலும், ஆலியா பட் ராணி வேடத்திலும் நடித்துள்ளனர். இதில் இன்னொரு முக்கிய ஜோடியாக தர்மேந்திரா - ஷபானா ஆஸ்மி வருகிறார்கள்.



படத்தில் ஒரு சூப்பரான லிப் லாக் காட்சியும் இடம் பெற்றுள்ளது. அதில் "வாயை"க் கொடுத்து கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது ஒரு ஜோடி.. நீங்க அது ரன்வீர் சிங், ஆலியா பட் ஜோடி என்று நினைத்தால் அதுதான் தவறு.. அந்த லிப்லாக் காட்சியில் முத்தமிட்டுக் கலக்கியுள்ளது ஷபானா ஆஸ்மியும், தர்மேந்திராவும்தான்.

சூப்பரான ஒரு பழைய இந்திப் பாடல் பின்னணியில் ஒலிக்க இருவரும் உதட்டு முத்தம் கொடுத்து அசத்தியுள்ளனர். இதுகுறித்து தர்மேந்திரா கூறுகையில், இந்த முத்தத்தை பலரும் வரவேற்றுள்ளனர். ஆச்சரியம் காட்டியுள்ளனர். இதில் ஒன்றுமே இல்லை. காதலர்கள் சந்திக்கும்போது கூடவே ரொமான்ஸும் இருக்கத்தானே செய்யும். அதைத்தான் நாங்கள் காட்டியுள்ளோம். இந்தக் காட்சியில் நடித்தபோது எனக்கும் சரி, ஷபானா ஆஸ்மிக்கும் சரி, எந்தவிதமான பதட்டமும் தயக்கமும் இல்லை. ரசிகர்கள் இதை விரும்பியது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியிருந்தார்.

தற்போது ஷபானா ஆஸ்மி தனது கருத்தைக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், அது ஒரு சாதாரண முத்தக் காட்சிதானே. அதற்கு ஏன் இவ்வளவு பரபரப்பும், பேச்சுக்களும், சலசலப்புகளும் என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் பெண்கள் ரொமான்ஸ் பண்ணக் கூடாதா.. அதுவும் ஸ்டிராங்கான பெண்கள் பண்ணினால் அதை விவாதப் பொருளாக்குவார்களா.

இருந்தாலும் இந்த முத்தக் காட்சியை ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்கள் வெகுவாக ரசித்துப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று கூறினார் ஷபானா ஆஸ்மி. அவருக்கு தற்போது 72 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்