ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!

Dec 30, 2025,05:24 PM IST

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று வெளியிட்டுள்ள மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 6-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.


இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஷபாலி வர்மா மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள அவர்  3 அரை சதங்களுடன் 236 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 118 ஆக உள்ளது. இலங்கைத் தொடரில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீராங்கனை இவரே ஆவார்.




பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா, 3-வது இடத்தில் நீடிக்கிறார். அண்மையில் 10,000 சர்வதேச ரன்கள் என்ற மைல்கல்லை அவர்  எட்டியது குறிப்பிடத்தக்கது. ரிச்சா கோஷ் 7 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை மற்றுமொரு வீராங்கனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தில் உள்ளார்.


தீப்தி சர்மா பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ரேனுகா சிங் பந்துவீச்சாளர் தரவரிசையில் 8 இடங்கள் எகிறி, 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்ரீசரணி 17 இடங்கள் முன்னேறி 52-வது இடத்தைப் பிடித்துள்ளார். அறிமுக வீராங்கனை வைஷ்ணவி சர்மா ஒரேடியாக 390 இடங்கள் முன்னேறி 124-வது இடத்திற்கு வந்துள்ளார்.


ஷெபாலி வர்மா கடந்த 2020-ஆம் ஆண்டு தனது 16-வது வயதிலேயே ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு

news

ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?

news

புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!

news

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு

news

"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு

news

vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்