சென்னையை அதிர வைத்த "கிங்" கான் பீவர்.. ஜவான் ப்ரீ ரிலீஸ் அதிரடி

Aug 30, 2023,03:11 PM IST
சென்னை: ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவையொட்டி ரசிகர்கள் மத்தியில் திருவிழா உணர்வு காணப்படுகிறது.

சென்னை சாய்ராம் பொரியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் இன்று மாலை ஜவான் திரைப்பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி ஷாருக் கான் ரசிகர்கள் முன்பு காட்சி தருகிறார். அவரை காணவும்,அவரது டான்ஸை பார்த்து ரசிக்கவும் ரசிகர்கள் பரவசமாக காத்திருக்கின்றனர்.



இயக்குநர் அட்லீ உள்ளிட்டோர் இதுதொடர்பாக போட்டிருந்த  வித்தியாசமான கெட்டப்பில் ஷாருக் கான் இடம் பெற்றுள்ள படமும், கூடவே ரெடியா என்ற கேப்ஷனும் இடம் பெற்றிருந்தது. மேலும் ஷாருக் கானும், வணக்கம் சென்னை நான் வருகிறேன்.. அனைத்து ஜவான்களும் சாய்ராம் கல்லூரியில் தயாராக இருங்கள் என்று கூறியிருந்தார்.

சாய்ராம் கல்லூரியில் வழக்கமாகவே கூட்டம் அலை மோதும். ஷாருக் கான் வருகிறார் என்றால் சும்மாவா.. கூட்டம் ஜே ஜே என்று காணப்படுகிறது. அந்தப் பகுதி முழுவதுமே ரசிகர்கள் தலையாக காட்சி தருகிறது.  ஜவான் படத்தில் இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளன.  படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்துள்ளன. படத்தைப் பார்க்க ரசிகர்கள் வெறியாக காத்திருக்கிறார்கள்.

செப்டம்பர் 7ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஜவான் திரைக்கு வருகிறது. நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். விஜய் கேமியோ ரோலில் வர வாய்ப்பிருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது. ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்